யோகி பாபுவின் அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!
Lorda Labaka Lyrical Video | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu). இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் ஒன்றாக உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டும் இன்றி நாயகனாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மற்ற காமெடி நடிகர்கள் நாயகனாக நடிக்கும் போது மீண்டும் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது இல்லை. ஆனால் யோகி பாபு அப்படி இல்லை கதையின் நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து படங்களில் காமெடியனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது நாயகனாக நடித்து வரும் படம் அன் ஆர்டினரி மேன்.
இந்த அன் ஆர்டினரி மேன் படத்தினை நடிகர் ரவி மோகன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கெனிஷா இசையமைத்துள்ளார். இவரும் இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்:
அன் ஆர்டினரி மேன் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து முன்னதாக முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிளாக லார்டா லபக்கா என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை கெனிஷா எழுதி உள்ள நிலையில் பாடகர்கள் சித்தார்த் மற்றும் மன்னார் முத்து ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… அது எனக்கு ரொம்ப பயமா இருந்தது.. சீன் படத்தின் கதை லீக் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Nee Lorda Labaka? Ille Lorrduuu Labaka! 🔥
https://t.co/ntOgcP4EAa
#LORDALABAKA Second Single from #AnOrdinaryMan is Out Now!
@iam_RaviMohan @iYogiBabu @keneeshaa #Siddharth #MannarMuthu @ProSrivenkatesh @Linqmarqet
#aom #Netflix https://t.co/8cBfnZtHOT
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) November 12, 2026
Also Read… SK 27 படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க வேண்டியது – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்