AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதீப் ரங்கநாதனின் புதுப் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்

Actor Pradeep Ranganathan New Movie Update | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ரங்கநாதனின் புதுப் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்
பிரதீப் ரங்கநாதன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 18:58 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இரண்டாவதாக இயக்கிய படத்திலேயே நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைப் போல அவர் நாயகனாக நடித்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான படங்கள் வசூலில் 100 கோடியை தாண்டிய நிலையில் இந்தப் படம் அந்த வசூலை நெறுங்கவில்லை இது அந்தப் படத்தின் தோல்வியையே குறிக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பிரதீப் ரங்கநாதனின் புதுப் படத்தின் நிலை என்ன?

பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படம் குறித்து ஒருவித குழப்பத்தில் உள்ளார். அவர் அதிரடி வகை திரைப்படங்களை நோக்கித் திரும்ப யோசித்து வருவதாகவும், அதே சமயம் திரில்லர் மற்றும் கற்பனை கதைகளையும் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அவரிடம் சொல்லப்பட்ட கதைகள் எதுவும் அவரை ஈர்க்கவில்லை. இதற்கிடையில், அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான திரைக்கதையை உருவாக்கும் பணியும் எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. எல்.ஐ.கே படத்திற்கு கிடைத்த ஏமாற்றமான வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தின் மூலம் ஒரு வலுவான மறுபிரவேசத்தை பிரதீப் எதிர்பார்க்கிறார்.

Also Read… சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரிலீஸிற்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு… ஓம் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

Follow Us