AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அச்சம் வேண்டாம், தடுப்பூசி அவசியம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே ஒரே வழி!

Child Vaccination: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்தி கொடிய தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பல தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் செலுத்துவது பாதுகாப்பானது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். காய்ச்சல் போன்ற எளிய பக்கவிளைவுகளைக் காரணம் காட்டித் தடுப்பூசிகளைத் தவிர்க்கக் கூடாது.

அச்சம் வேண்டாம், தடுப்பூசி அவசியம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே ஒரே வழி!
Image Source: magnific
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Nov 2026 19:30 PM IST

குழந்தைப் பிறப்பு முதல் பல்வேறு பருவங்களில் அடுத்தடுத்து செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பல சந்தேகங்களும் அச்சங்களும் நிலவுகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் வதரிகளால் ஏற்படும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி உலக தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. காவேரி மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் ரூசெலியன், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது ஏன் அவசியமானது என்பது குறித்தும், அதிலுள்ள உண்மைகள் குறித்தும் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

Also Read: பெற்றோர்களே! குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துகிறீர்களா?

குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்?

நவீன மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகத் தடுப்பூசிகள் கருதப்படுகின்றன. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் கொடிய தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட நோய்களின் அபாயத்தை முற்றிலுமாகத் தடுத்து, பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கத் தடுப்பூசிகள் பெரிதும் உதவுகின்றன.

தடுப்பூசி போட்டால் ஆட்டிசம் ஏற்படுமா?

தடுப்பூசிகள் குறித்துப் பெற்றோர்களிடம் நிலவும் மிகவும் பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்று, இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்பதாகும். ஆனால், தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்தவொரு அறிவியல் பூர்வமான தொடர்பும் இல்லை என்று மருத்துவர் அருள்ராஜ் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, ஆதாரமற்ற வதநிதிகளை நம்பி குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பான தடுப்பூசிகளைத் தவிர்க்கக் கூடாது.

சிறு வயதிலேயே அதிக தடுப்பூசிகள் போடுவது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்குமா?

ஒரே காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பல தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுவதால், அவற்றின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுமா என்ற கவலை பலரிடம் உள்ளது. ஆனால், குழந்தைகளின் உடல் ஒரே நேரத்தில் பல தடுப்பூசிகளை எதிர்கொள்ளும் அளவிற்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சரியான அட்டவணையின்படி தடுப்பூசிகளைச் செலுத்துவது குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும்.

இயற்கையாக நோய் வந்து குணமடைவதுதான் சிறந்ததா?

சிலர் இயற்கையாக நோய்த்தொற்று ஏற்பட்டு அது சரியாவதன் மூலமாக வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால், இயற்கையான தொற்றுகள் உயிருக்கே ஆபத்தான தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, தொற்று வந்து அவதிப்படுவதைக் காட்டிலும், பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை முன்கூட்டியே வழிகாட்டும் தடுப்பூசிகளையே மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது.

Also Read: பெற்றோர்களே! குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துகிறீர்களா?

தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது?

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், வலி அல்லது ஊசி போட்ட இடத்தில் சிறிய வீக்கம் ஏற்படுவது இயல்பான உடலியல் மாற்றமாகும். இவை தற்காலிகமானவை மட்டுமே என்பதால், இதைக் காரணம் காட்டி அடுத்தடுத்த தடுப்பூசிகளைத் தவிர்க்கக் கூடாது. ஒருவேளை காய்ச்சல் தீவிரம் அடைந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us