AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த பிராங் நல்லா இல்ல.. ஜூனியர் பிக் பாஸ் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கால் காண்டான போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Secret Task: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 65 நாட்களை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் பிக் பாஸாக தற்போது பிக் பாஸ் வீட்டை வினோத் கட்டுப்படுத்திவரும் நிலையில், அவர் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கினால் போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த பிராங் நல்லா இல்ல.. ஜூனியர் பிக் பாஸ் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கால் காண்டான போட்டியாளர்கள்!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Nov 2026 19:04 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 9 வாரங்களை கடந்து, தற்போது 10வது வாரத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது தமிழில் ஸ்டார் விஜய் (Star Vijay Tv) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி போன்றவற்றில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த ஷோவை விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக வரவேற்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கடந்த வாரத்தில் அஸ்மிதா மற்றும் அக்ஷிதா இருவருமே வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வராத்தில் பிக் பாஸ் குரல் இல்லாமல் பிக் பாஸ் வீடு இருக்கிறது. அந்த விதத்தில் ஜூனியர் பிக் பாஸாக (Junior Bigg Boss) வினோத் பாபு குரல் கொடுத்துவரும் நிலையில், அந்த பதவிக்கு போட்டியாளர்கள் போட்டியிட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், ஜூனியர் பிக் பாஸான வினோத் பாபு தன்யா மற்றும் முகேஷ் இருவருக்கும் சண்டையிடும்படி சீக்ரட் டாஸ்க் கொடுத்திருந்தார். அது போட்டியாளர்கள் உண்மை என நினைத்திருந்தனர். இந்நிலையில் அது உண்மையில்லை என்ற ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆலுமா டோலுமா…. 11 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் வேதாளம் படம்!

சீக்ரட் டாஸ்க்கினால் ஜூனியர் பிக் பாஸ் மீது காண்டான போட்டியாளர்கள்:

இந்த ப்ரோமோவில், வினோத் பாபு தன்யா மற்றும் முகேஷ் சண்டை குறித்து பேசியிருந்தார். மேலும் அந்த உண்மையை போட்டியாளர்களிடம் கூறும்படி அவர் கூறினாரா. உடனே தன்யா மற்றும் முகேஷ் இருவருமே இது பிராங் என கூறியதும். சக போட்டியாளர்கள் கடுப்பாகிவிட்டனர். இந்நிலையில் லக்ஷ்மி பிரியா மற்றும் சாதிகா மிகவும் கோபப்பட்ட நிலையில், ஜூனியர் பிக் பாஸை மாற்றியே ஆகவேண்டும் என சாதிகா கத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை? வைரலாகும் தகவல்

இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. கடந்த ப்ரோமோவில் தன்யா மற்றும் முகேஷ் இருவரும் கைகலப்பாக சண்டையிட்டிருந்த நிலையில், அதை உண்மை என போட்டியாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அந்த சண்டையின்போது தன்யா சிரித்திருந்தார். அப்போதே இது பிராங் என தெரிந்தது. ஆனால் இது சக போட்டியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 65வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த சீசன் ஆரம்பமானத்திலிருந்தே சண்டை, சாப்பாட்டிற்கு சண்டை, போட்டி பொறாமைகள் என மிகவும் வித்தியாசமாகவே அமைந்திருந்தது. அந்த விதத்தில் இன்னும் இந்த நிகழ்ச்சியின் முடிவிற்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர் வெற்றியை பெறுவார் என கணிக்கமுடியவில்லை. ஆனால் டிடிஃஎப் வாசன் மற்றும் ஜேசன் இருவரில் ஒருவர் வெற்றிபெறுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us