அப்படியெல்லாம் படத்தில் இல்ல.. தனுஷ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
Director Rajkumar Periyasamy About Om Movie: ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரின் இயக்கத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓம். இப்படத்தில் இல்லாத முக்கியமான விஷயம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மனம் திறந்துள்ளார்.
நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Periasamy) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஓம் (Om Movie). இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் மம்முட்டி (Mammootty) மற்றும் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது செம்மர கடத்தல் தொடர்பாக தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படமானது வரும் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது. இப்பாத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த படத்தின் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசிய நிலையில், இப்படத்தில் இல்லாத விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சீன் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு… நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா – வைரலாகும் எக்ஸ் தள பதிவு!
ஓம் திரைப்படத்தில் இல்லாத விஷயம் குறித்து விளக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி:
அந்த நேர்காணலில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “ஓம் படத்தின் ஷூட்டிங்கின்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவந்தது. ஸ்ரீலீலா மற்றும் தனுஷ் சார் இருவரும் நடனமாடுவதுபோல அதில் காட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: முடிஞ்சா கைய வை.. தன்யாவிடம் கைகலப்பில் ஈடுபட்ட முகேஷ் – பரபரப்பில் பிக் பாஸ் வீடு!
ஆனால் அதுபோல இந்த திரைப்படத்தில் எந்த காட்சிகளும் இல்லை. மேலும் தற்போது ஓம் திரைப்படத்தில் இருக்கும் “அல்லக லோவா” என்ற குரூப் பாடல், கச்சேரியின்போது நிஜமாக நடப்பதுபோல எடுக்கப்பட்ட பாடல்” என அதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.
ஓம் திரைப்படத்தின் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Some Arabic, some funk and a lot of fun 😉
Fa Fa Fa – Lyric video from #OM out now.
▶️ https://t.co/RRNklVAuBm
Get ready for the strike in theatres, from November 20.
A @Rajkumar_KP Film.
A @SaiAbhyankkar beat!@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @TamizhAdhavan @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 9, 2026
இந்த ஓம் திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து மொத்தமாக 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டிக்கெட் புக்கிங் குறித்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.