ஆலுமா டோலுமா…. 11 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் வேதாளம் படம்!
11 Years Of Vedalam Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற வேதாளம் படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நாயகனாக மட்டும் இன்றி ரேஸராகவும் வலம் வருகிறார். கடந்த ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த ஆண்டில் இன்னும் அடுத்தப் படத்தில் படப்பிடிப்பு தொடங்காதது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து முன்னதாக வெளியான படங்களை ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்ற படங்களை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை இயக்குநர் சிவா எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் ஆக்ஷன் செண்டிமெண்ட் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த வேதாளம் படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், அஸ்வின் கக்குமானு, அனிகேத் சவுகான், கபீர் துஹான் சிங், சூரி, தம்பி ராமையா, ராஜேந்திரன், அவினாஷ், சுதா, மயில்சாமி, மன்சூர் அலி கான், அப்புக்குட்டி, கோவை சரளா, யோகி பாபு, ரவிராஜ், ஸ்ரீரஞ்சனி, ஷர்மிளா தாபா, வித்யுல்லேகா ராமன், நாகிநீடு, சுவாமிநாதன், பால சரவணன், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, ராஜ்குமார், தமிழ்செல்வி, கலைராணி, மீரா கிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.மனோகர், அமித் திவாரி, டி.ஆர்.கே.கிரண், ஜாஸ்பர், முக்தர் கான், தேஜ் சப்ரு, சுக்ரன், மிப்பு, ஆர்யன் ஆஷிக் மற்றும் கண்ணன் பொன்னையா ஆகியோர் நடித்து இருந்தனர்.
Also Read… Mammootty: அவர் சண்டையிடுவதை பார்த்தல் ஹீரோவே தோற்றுவிடுவார்கள்.. சாய் பல்லவியை புகழ்ந்த மம்முட்டி!




11 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் வேதாளம் படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேதாளம் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களின் ஒளிப்பதிவாளர் மரணம் – சோகத்தில் திரையுலகம்