AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

U19 Asia Cup: 160 ரன்கள் விளாசி மிரட்டிய சேவாக் மகன் ஆர்யவீர்.. அண்டர்-19 ஆசியக் கோப்பையில் இந்தியா அபார வெற்றி!

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் லக்ஷ்ய ராஜேஷ் ராய்சந்தானி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஆர்யவீர் சேவாக் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

U19 Asia Cup: 160 ரன்கள் விளாசி மிரட்டிய சேவாக் மகன் ஆர்யவீர்.. அண்டர்-19 ஆசியக் கோப்பையில் இந்தியா அபார வெற்றி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 Nov 2026 18:46 PM IST

நவம்பர் 10, 2026: அண்டர்-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இளம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் விளாசி அசத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 309 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

160 ரன்கள் விளாசிய ஆர்யவீர் சேவாக்

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் லக்ஷ்ய ராஜேஷ் ராய்சந்தானி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஆர்யவீர் சேவாக் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மேலும் படிக்க: IND Vs NZ – ஆதிக்கம் செலுத்திய மழை… இந்தியா – நியூசிலாந்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு

அவருக்கு வி.கே. வினீத் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆர்யவீர், 168 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 160 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் அன்வய் டிராவிட் 12 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது.

48-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்

310 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியின் அகமது குதாதாத் 74 ரன்களும், நூருல்லா அயூபி 25 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவால் அளித்தனர்.

இந்நிலையில், 48-வது ஓவரில் பந்துவீசிய இஷான் சூத் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதலில் அயூபியை கேட்ச் அண்ட் பவுல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த அவர், தொடர்ந்து குதாதாத் விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஐக்கிய அரபு அமீரக அணியின் வெற்றி வாய்ப்பு முடங்கியது.

ஆர்யவீரின் சதமும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும்

இறுதிக்கட்டத்தில் தேவையான ரன் வேகம் அதிகரித்ததால் ஐக்கிய அரபு அமீரக அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆர்யவீர் சேவாக்கின் 160 ரன்கள் என்ற பிரமாண்ட ஆட்டமும், இஷான் சூத்தின் முக்கியமான விக்கெட்டுகளும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

Follow Us