சத் பூஜை பண்டிகை எதிரொலி.. சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்! கோவை, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்
சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான ரயில்களுடன் போத்தனூரில் இருந்து பீகாரில் உள்ள பரோனி, தர்பங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்காகக் காத்திருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு இல்லாத பயணிகள் பொதுப் பெட்டிகளில் பயணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.