திருச்சியில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்.. போலீசார் நடவடிக்கை எடுக்க உரிமையாளர் கோரிக்கை!
திருச்சி இபி சாலையில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்ட இளைஞர், பெண் ஊழியர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவாட்டுப்பேட்டையைச் சேர்ந்த கோபால் என்பவர், நேற்று மாலை பெட்ரோல் நிரப்ப வந்தபோது வரிசையில் நிற்காமல் பெட்ரோல் போடுமாறு தகராறு செய்துள்ளார்.
திருச்சி இபி சாலையில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்ட இளைஞர், பெண் ஊழியர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவாட்டுப்பேட்டையைச் சேர்ந்த கோபால் என்பவர், நேற்று மாலை பெட்ரோல் நிரப்ப வந்தபோது வரிசையில் நிற்காமல் பெட்ரோல் போடுமாறு தகராறு செய்துள்ளார். இதைத் தட்டிக்கேட்ட பெண் ஊழியர் ஹேமாவைத் தரக்குறைவாகப் பேசி, கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பங்க் உரிமையாளர் சுப்பு, தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் ஊழியர்கள் இரவு நேரப் பணிக்கு வர அச்சப்படுவதாகவும், இரண்டு நாட்களாகப் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
