AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேனியில் தேசத்துரோக செயல்? அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!

Theni Govet School : தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் காலி மது பாட்டில் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக கோம்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தேனியில் தேசத்துரோக செயல்? அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!
கொடிக்கம்பத்தில் மது பாட்டில்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Nov 2026 19:01 PM IST

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்படும் கொடி கம்பத்தில் காலி மது பாட்டில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே பண்ணைப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பண்ணைப்புரம், கரியணம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை காரணமாக அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டு பள்ளி வளாகமும் ஆட்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இதனை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்ட சில மர்ம நபர்கள் காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் அமைந்துள் தேசியக் கொடி ஏற்றப்படும் கொடிக் கம்பத்தில் கயிற்றில் கட்டி ஏற்றியுள்ளனர்.

பள்ளி கொடி கம்பத்தில் காலி மது பாட்டில்

அத்துடன் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், வழக்கம் போல இன்று செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 10- ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேசியக் கொடி கம்பத்தில் காலி மது பாட்டில் தொங்கவிடப்பட்டு இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த மது பாட்டிலை கீழே இறக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!

கோம்பை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

அந்த தகவலின் பேரில், கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த காலி மது பாட்டிலை அகற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இது தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் கோம்பை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்களுக்கு வலை வீசிய போலீசார்

இதில், பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு, மது போதையில் காலி மது பாட்டிலை கயிறு கட்டி கொடி கம்பத்தில் ஏற்றியது தெரியவந்தது. இதில், ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தொடர்பாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us