தமிழகத்தில் ரவுடிகள் வேட்டை.. ஒரே நாளில் 467 பேர் கைது.. 6540 பேருக்கு எச்சரிக்கை.. காவல் காட்டிய அதிரடி!
Rowdies Arrested In Tamil Nadu : தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் மேற்கொண்ட ரவுடிகள் வேட்டையில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 6540 பேருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் 300 க்கும் மேற்பட்டோரிடம் பிணைபத்திரம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பெருமளவு சீர்குலைந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஒரு பகுதியாக போலீசார் அதிரடி ரவுடி வேட்டை மேற்கொண்டனர். இதில், சுமார் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6540 ரவடிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை
அத்துடன், 6540 ரவுடிகளுக்கு குற்ற செயல்களி்ல ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சுமார் 305 ரவுடிகளுகளிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 305 ரவுடிகளிடம் பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாகவும், 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போனது குத்தமா? 7 பேராசிரியர்கள் வீடுகளில் பல லட்சம் நகை, வெள்ளி கொள்ளை.. திருவாரூரில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்!




222 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
அத்துடன், 185 ரவுடிகள் உள்பட சுமார் 222 பேரை பிடித்து சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளன. 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 33 ரவுடிகள் உள்பட 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த அதிரடி நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் – சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
இதனிடையே, தீபாவளி பண்டிகை நாளில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 13 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதில், நடு ரோட்டில் தீபாவளி பட்டாசு வெடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் கொலை சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் இந்த அதிரடி வேட்டைய தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் இந்த அதிரடி வேட்டை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!