நீர்நிலைகளைச் சீரமைக்க தன்னார்வ அமைப்புகளுக்கு புதிய வசதி! ‘ஏரி’ இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
AERI App: புதிய இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பரிசீலனை, ஒப்புதல் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 10, 2026: தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் எளிதாகப் பங்கேற்கும் வகையில், ‘ஏரி’ (AERI) என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர்வளத் துறை சார்பில் உருவாக்கப்பட்ட இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 5 அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அரசுத் துறைகளின் அனுமதி பெறுவதில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு!
இதுவரை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அமைப்புகள், பல்வேறு அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தன. இதனைத் தவிர்த்து, விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே இணையதளத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் (https://t.co/21hjtgHXxo) தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |— TN DIPR (@TNDIPRNEWS) November 10, 2026
இந்தத் தளத்தில் 5 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏரி, குளங்களைத் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: “குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல தமிழ்நாடு சீரழிந்துவிட்டது” – தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி பரந்தாமன்!
15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ்
புதிய இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பரிசீலனை, ஒப்புதல் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 அரசுசாரா அமைப்புகளுக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கினார்
தொடர்ந்து, சிறுதுளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை ஆகிய 5 அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் விஜய் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் படிக்க: Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!
இந்த இணையதளத்தின் மூலம் நீர்நிலைகளைப் புனரமைப்பதில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்து, தமிழகத்தின் நீர்வளத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.