AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ஊருக்கு போனது குத்தமா? 7 பேராசிரியர்கள் வீடுகளில் பல லட்சம் நகை, வெள்ளி கொள்ளை.. திருவாரூரில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்!

Tiruvarur Jewelry And Cash Stolen: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள 7 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வீடுகளில் நகை, பணம், வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். தீபாவளி விடுமுறையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீபாவளிக்கு ஊருக்கு போனது குத்தமா? 7 பேராசிரியர்கள் வீடுகளில் பல லட்சம் நகை, வெள்ளி கொள்ளை.. திருவாரூரில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்!
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Nov 2026 16:49 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள 7 பேராசிரியர்களின் வீடுகளில் வீடுகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் மாவட்டம், நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இங்கு, 100- க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

7-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வீடுகளில் கொள்ளை

இதனால், பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பலர் தங்களது குடியிருப்பு வீடுகளை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த குடியிருப்பு வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்து, 7- க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் வீடுகளின் உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, பீரோ, அலமாரி, மேஜை உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தீபாவளி விடுமுறை முடிவடைந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பேராசிரியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பல்கலைக்கழக குடியிருப்புகளுக்கு திரும்பிய நிலையில், வீட்டின் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!

நன்னிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, அலமாரி உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் குடியிருப்பு வளாகம் மற்றும் அந்த குடியிருப்புக்கு செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை

அதில், கொள்ளைக் கும்பலின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 7 பேராசிரியர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!

Follow Us