கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசெஜ்? பாதுகாப்புக்காக தனி காவலர் நியமனம்.. விஜய் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி!
Kanimozhi condemns Kallakurichi TVK MLA : கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு கனிமொழி எம். பி . கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ- வாக இருந்து வருபவர் அருள் விக்னேஷ். இவர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா என்பவரின் வாட்ஸ்அப் என்னுக்கு ஆபாச மெசேஜ் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்சியருக்கு அவர் அனுப்பிய மெசேஜில், அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்… எப்போது பார்க்கலாம்… என்று தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கூறியிருப்பதாக தெரிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜா, இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் அறிவுறுத்தலின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ
இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்திலும், அரசு ஊழியர்கள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்பியும் ஆன கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆச்சியருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: மக்கள் எப்போதும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் – முதல்வர் விஜய்க்கு எம்.பி கனிமொழி கண்டனம்..




பெண் ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமனம்
அத்துடன் மதுபோதையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியரின் வீட்டின் அருகே சென்று தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களுக்காக ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டதாகவும் வலைதளங்களின் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த திறனற்ற தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக சட்டம்- ஒழுங்கு சீர் கேட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய்யிடம் என்ன பதில் உள்ளது
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ ஒருவரால் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தனி பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதில் மூலம் அந்த ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் என்ன பாதுகாப்பை கொடுத்து விடப் போகிறார். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே. இதற்கு என்ன பதில் இருக்கிறீர்கள் என்று அந்தப் பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க: சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!