AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை விமானத்தில் பறந்து வந்த கருப்பு கவர்.. சோதனையில் சிக்கிய ரூ.2.30 கோடி பொருள்.. புலனாய்வு அதிகாரிகள் பிடியில் வடமாநில நபர்!

Rs.2.30 Crore Smuggling Gold Seize : ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.30 கோடி மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.அதனை கடத்திவந்தவரையும் கைது செய்தனர்.

சென்னை விமானத்தில் பறந்து வந்த கருப்பு கவர்.. சோதனையில் சிக்கிய ரூ.2.30 கோடி பொருள்.. புலனாய்வு அதிகாரிகள் பிடியில் வடமாநில நபர்!
சென்னை விமான நிலையம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Nov 2026 20:47 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அபுதாபியில் இருந்து வந்தடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உள் படுத்தினர். இதில், வழக்கமான சோதனைகளை கொண்டு வெளியே வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த நபரை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை சோதனை மேற்கொண்டனர்.

கருப்பு நிற கார்பன் பேப்பரில் ரூ. 2.30 கோடி தங்கம் கடத்தல்

இதில், அந்த நபர் பெயர் ராஜீவ் இப்ராம் ஷா ( 42 வயது) என்பது தெரியவந்தது. அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், கருப்பு நிற கார்பன் பேப்பரால் பார்சலை பார்த்ததில் அதில் சுமார் 1.60 கிலோ எடை உள்ள 24 காரட் சுத்தமான தங்க பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ. 2.30 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தங்கம் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் இப்ராம் ஷாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: தீபாவளி மது விற்பனை.. 2 நாட்களில் எத்தனை கோடி வருமானம் தெரியுமா? லிஸ்ட்டில் முதலில் இருக்கும் திருச்சி!

வடமாநில நபர் கைது- பாஸ்போர்ட் பறிமுதல்

தொடர்ந்து, அவரை தீவிர விசாரணைக்காக தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவர், அபுதாபி, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, குவைத் இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து விமானத்தில் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. எனவே, இவர் இதற்கு முன்பு மேற்கொண்ட பயணத்தின் போது இதே பாணியில் தங்கம் கடத்தி வந்திருக்கலாமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா

அத்துடன், இந்த தங்க கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா. யாருக்காக சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: போலி நூல்கள் ஊழல் விவகாரம்.. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு.. சிக்கப்போவது யார்?

Follow Us