போலி நூல்கள் ஊழல் விவகாரம்.. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு.. சிக்கப்போவது யார்?
DVAC Inspection Anna Centenary Library : சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போலி நூல்கள் குற்றச்சாட்டு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வால் நூலக வட்டாரத்தில் பரபரப்ப ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூல்கள் போலியானவை என்றும், அந்த நூல்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு உங்களில் நூலகங்களில் நூல்கள் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக அரசு சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 4 பேர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் தொடர்பான கோப்புகள் மற்றும் பதிவேடுகள் ஆகியவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வு
இதில், குறிப்பாக முறைகேடான முறையில் அரசு பணத்தை கையாடல் செய்யும் வகையில் பெயர்களில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் எவ்வாறு வாங்கப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மேற்கொண்டு வரும் இந்த தீவிர ஆய்வில் புத்தகங்களின் பதிப்புரிமை, அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர், அந்தப் புத்தகத்தின் பதிப்பகம், அதன் விலை உள்ளிட்டவற்றை போலீசார் தீவிர ஆய்வு செய்து, அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: அரசு பேருந்துகளில் லைவ் டிராக்கிங்க் சிஸ்டம்.. பயணிகள் பாதுகாப்புக்கு அவசர உதவி பொத்தான்.. ரூ.17.99 கோடி ஒதுக்கீடு!




ஏஐ மூலம் கோடிக்கணக்கில் போல நூல்கள்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு நூலகங்கள் மற்றும் பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட இடங்களில் போலிப் பெயர்களை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மூலமாக புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ள ஆக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மோகன் ராஜ்மோகன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்திருந்தார். மேலும், சென்னை கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நூலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
நூலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
இதன் காரணமாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ள இந்த ஆய்வு நூலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் நிதி கையாடல்கள் குறித்து முழுமையான உண்மையை கொண்டு வர இந்த சோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தீபாவளி மது விற்பனை.. 2 நாட்களில் எத்தனை கோடி வருமானம் தெரியுமா? லிஸ்ட்டில் முதலில் இருக்கும் திருச்சி!