துடியலூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை… அதிகாலை நடைபயிற்சி செல்வோருக்கு எச்சரிக்கை!
கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் வேணு நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, வேணு நகர் தெருக்களில் உணவு தேடி உலா வந்துள்ளது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே வர வேண்டாம் என்றும், நடைபயிற்சி செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் யானை ஊருக்குள் புகுந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.