தலைவர் வேற பாஸ் வேற.. முனியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் – ப்ரோமோ இதோ!
Jason And Muniyammal Fight: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது 9வது வாரத்தை கடந்து, 10வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த வார துவக்கமே பிக் பாஸாக நாற்காலியில் அமர்வது யார் என்ற டாஸ்க்குடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதில் ஜேசன் மற்றும் முனியம்மாள் இருவரிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், அது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது தற்போது 10வது வாரத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் மூலம் அக்ஷிதா மற்றும் அஸ்மிதா என இரு போட்டியாளர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸாக இந்த வீட்டை ஆட்சி செய்ய ஒரு போட்டியாளர் இருப்பார்.
இந்நிலையில் முதல் போட்டியாளராக வினோத் பாபு இருக்கும் நிலையில், அவரை அந்த பதவியிலிருந்து விலக வைக்க சக போட்டியாளர்களும் திட்டமிட்டுவருகிறார்கள். இதற்கிடையே முனியம்மாள் மற்றும் ஜேசன் இருவரிடையேயும் வாக்குவாதம் எழுந்துள்ளது.




இதையும் படிங்க: சூர்யாவின் 49வது படத்தின் கதை இப்படியா இருக்கும்? டைட்டில் என்ன தெரியுமா?
ஜேசன் மற்றும் முனியம்மாள் இடையே எழுந்த வாக்குவாதம்:
இந்த ப்ரோமோவில், முனியம்மாள் ஜேசனிடம், “எனக்கு கோவம் வருகிறது ஏன் அப்டி கோப படுறீங்க என கேட்டார். உடனே ஜேசன் எனக்கு தேவியான இடம் ஜூனியர் பிக் பாஸ் நாற்காலி என கூறினார். உடனே முனியம்மாள் நான் உங்களை கோபப்படுத்த பேசியிருந்தாலும், இந்த பிக் பாஸ் வீட்டின் தலைவர் நான்தான் என்ற பேச்சு உங்களுக்கு ஏன் வரலை. என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!
உடனே ஜேசன், “வீட்டின் தலைவர் வேற பாஸ் வேற, வீட்டின் தலைவர் என்றால் லீடர், பாஸ் என்றால் எல்லாருக்கும் மேல இருப்பதுதான் பாஸ், அதுகூட தெரியாமல் இந்த கேமில் வந்து உக்காந்துருக்குற” என அதில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 64வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day64 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/VUwyZyWa4G
— Vijay Television (@vijaytelevision) November 9, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது மொத்தமாக 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் எந்த எவிக்ஷனும் இருக்காதது என நினைத்த நிலையில், டபுள் எவிக்ஷன் இருந்தது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் வரும் வாரத்திலும் எவிக்ஷன் கட்டாயமாக இருக்கும் என கூறப்படுகிறது.