AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பான டாஸ்குகளுடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. தற்போது இந்நிகழ்ச்சி 10வது வாரத்தில் உள்ள நிலையில், பிக் பாஸ் வாய்ஸ் இந்த வீட்டில் இந்த வாரத்திற்கு கேட்காதாம். அதனால் ஜூனியர் பிக் பாஸாக வினோத் இருக்கும் நிலையில், அவரை மாற்றுவதற்கு போட்டியாளர்கள் துடிக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸ் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Nov 2026 17:02 PM IST

தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Big Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் தீபாவளி வாரம் என்ற நிலையில் எவிக்க்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருந்தது. அந்த விதத்தில் அஸ்மிதா மற்றும் அக்ஷிதா என இரு பெண் போட்டியாளர்களும் இந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தற்போது இந்த பிக் பச வீட்டில் மொத்தமாக 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலே ஜூனியர் பிக் பாஸாக வினோத் பாபு (Vinoth Babu) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில், பிக் பாஸ் வாய்ஸ் ஒரு வாரத்திற்கு கேட்காது என கூறப்பட்ட நிலையில், சக போட்டியாளர்கள் செய்வதை வினோத் பாபு பார்வையிட்டு பிக் பாஸ் இடத்தை அவர் நிரப்பவேண்டும். இந்நிலையில் அவரின் இந்த பதவியை பறிப்பதற்கு சக போட்டியாளர்கள் பேசும் விஷயம் குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

ஜூனியர் பிக் பாஸ் பதவியை வினோத்திடமிருந்து பிடுங்க நினைக்கும் போட்டியாளர்கள்:

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் பிக் பாஸாக வினோத் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த விதத்தில் அவரின் இடத்திலிருந்து சக போட்டியாளர்களுக்கு வினோத் பாபுவே கமெண்ட் கொடுக்கவேண்டும். அந்த விதத்தில் அவருக்கு இந்த வீட்டில் எல்லா அதிகாரமும் இருக்கிறது. அந்த அதிகாரத்திற்காக அவரின் பதவிக்கு சாதிகா போட்டியிடுவதுபோல ப்ரோமோ ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: இது சீன் தீபாவளி… வசூலில் ஹாட்ரிக் அடிக்கும் சூர்யா – வெளியானது அப்டேட்

அந்த விதத்தில் தற்போது வெளியாகியுள்ள புது ப்ரோமோவ்பி, சாதிகா, லக்ஷ்மி பிரியா மற்றும் முத்தழகியிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் சாதிகா சென்றதும், முத்தழகி மற்றும் லக்ஷ்மி பிரியா பேசியிருந்த நிலையில், அவர்கள் சாதிகா மற்றும் அன்சர் இருவருமே அந்த பதவிக்கு வரக்கூடாது என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 64வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

கடந்த வாரத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அக்ஷிதா மற்றும் அஸ்மிதா என இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் எந்த எவிக்ஷனும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us