AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா… வைரலாகும் புரோமோ வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்று போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக்பாஸாக இருந்து வீட்டை வழிநடத்துகிறார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே சண்டையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா… வைரலாகும் புரோமோ வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 13:02 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல சர்ப்ரைஸ்கள் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிகழ்ச்சி குழு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டாக் லைனுக்கு ஏற்ப தொடர்ந்து டிவிஸ்ட் மேல ட்விஸ்டாக நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு எவிக்‌ஷன் இல்லை இரண்டு எவிக்‌ஷன் என்று பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினர். பொதுவாக இந்த மாதிரியான பண்டிகை காலத்தில் எவிக்‌ஷனே இல்லை என்று கூறி போட்டியாளர்களை மகிழ்ச்சியடைய செய்து பார்த்து இருப்போம். இந்த டபுள் எவிக்‌ஷன் என்பது பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியான ஒன்றாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 10-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றது.

அந்த வகையில் இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக பிக்பாஸ் குரலே இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக்பாஸாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ஜூனியர் பிக்பாஸாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் வினோத் பாபு தேர்வாகி உள்ளார்.

ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா:

இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர் சாதிகா பிக்பாஸாக இருந்தால் அப்படி செய்து இருக்க மாட்டார். வினோத் பாபு இந்த பதவிக்கு சரியானவர் இல்லை என்பது போல முதலில் பேசத் தொடங்குகிறார். இவை அனைத்தையும் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த வினோத் பாபு சாதிகாவிடம் நேரடியாக சென்று பேசுகிறார். அப்போதும் சாதிகா அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தர்மன் படத்தின் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி – வீடியோ வெளியிட்ட படக்குழு

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அவினாஷிற்காக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்திய ஜேசன்… டபுள் எவிஷனை உறுதி செய்த விஜய் சேதுபதி… ட்விஸ்ட் மேல ட்விஸ்டாக வெளியானது பிக்பாஸ் புரோமோ!

Follow Us