AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்தின் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி – வீடியோ வெளியிட்ட படக்குழு

Ram Pothineni joining the film Dharman | தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் பொதினேனி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்துள்ளது தொடர்பான வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தர்மன் படத்தின் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி – வீடியோ வெளியிட்ட படக்குழு
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 17:47 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் பொதினேனி (Ram Pothineni). இவர் கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான தேவ்தாசு என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் ராம் பொதினேனி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் இறுதியாக தெலுங்கு மொழியில் வெளியான படம் ஆந்திரா கிங் தாலுகா. இந்தப் படத்தினை இயக்குநர் மகேஷ் பாபு பி எழுதி இயக்கி இருந்தார்.

மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தெலுங்கு மொழியில் படங்களில் நடித்து வந்த நடிகர் ராம் பொதினேனி தற்போது தமிழ் மொழியில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளார். ஆனால் இவர் அறிமுகம் ஆகும் முதல் படத்தில் அவர் நாயகனாக இல்லாமல் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்மன் படத்தின் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி:

அதன்படி நடிகர் ராம் பொதினேனி தற்போது தமிழ் சினிமாவில் தர்மன் படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது தொடர்பான செய்திகள் முன்பு சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் தர்மன் படக்குழுவினர் தங்களது பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில் தர்மன் படத்தில் நடிகர் ராம் பொதினேனி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தர்மன் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வரும் நிலையில் படம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டு எவிக்‌ஷன் இருக்கு… வைரலாகும் தகவல்!

தர்மன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம் – வெளியானது அப்டேட்!

Follow Us