AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

TVK MLA Mustafa Mecca Prayers : தமிழக முதல்வர் விஜய் இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என புனித மெக்காவில் மொட்டை அடித்துக்கொண்டதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா
முதல்வர் விஜய் - தவெக எம்எல்ஏ முஸ்தபா
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2026 19:15 PM IST

சென்னை, நவம்பர் 8 : தமிழக முதல்வர் விஜய் இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என புனித மெக்காவில் (Holy Mecca) மொட்டை அடித்துக்கொண்டதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் பேசும் மதுரை மத்திய தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, தமிழக முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து, மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என புனித மெக்காவிற்கு சென்று மொட்டை அடித்து பிரார்த்தனை செய்துள்ளார்.

முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சார்பில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் முஸ்தபா, புனித மெக்காவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழக முதல்வர் விஜய் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதியுடன் இருக்க வேண்டி மெக்காவில் உள்ள இறை இல்லத்தில் மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தீபாவளி மறுநாளும் கனமழை எச்சரிக்கை – இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

இதுகுறித்து மெக்காவில் இருந்து அவர் பேசும் வீடியோ வெளியான நிலையில் அதில் பேசும் அவர், “இந்தியாவில் வாழும் அனைத்து மக்களிடம் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் எனவும் தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் விஜய், தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், முதல்வர் விஜய்க்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைத்து, மக்கள் நலனுக்காக பல சாதனைகளை படைக்க ஏக இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகவும், அதேபோன்று உலகம் முழுவதும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாகவும் முஸ்தபா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டி.. தள்ளு வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்!

குதிரை பேரம் நடைபெற்றதாக புகார்

முன்னதாக தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதனையடுத்து முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பி.எம். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us