AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.200 கோடிக்கு மேல் கட்டுமான பணிகளுக்காக புதிய நிறுவனம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

New Public Sector Company : தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பிற்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கிடும் வகையில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகம் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.200 கோடிக்கு மேல் கட்டுமான பணிகளுக்காக புதிய நிறுவனம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2026 18:17 PM IST

சென்னை, நவம்பர் 8 : தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பத்துள்ளது. அதன்படி, “தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகம் என்ற பெயரில் ஒரு புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18, 2026 அன்று தமிழக சட்டமன்றத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) அறிவித்திருநந்தார்.

ரூ.200 கோடிக்கு மேல் கட்டுமான பணிகளுக்காக புதிய நிறுவனம்

தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பிற்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கிடும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல், தனியார் நிறுவனங்களுக்கான கட்டட ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகம் (Tamil Nadu Infrastructure and Construction Corporation) அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டி.. தள்ளு வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்!

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18, 2026 அன்று, “தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேற்பட்ட அரசு கட்டட பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்கு கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்றல் ஆகியவற்றிற்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (TNICC) நிறுவப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பத்துள்ளது. அதன்படி, ரூ.200 கோடிக்கு மேல் உள்ள அனைத்து அரசு கட்டுமான பணிகளையும் இனி இந்த நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தாமல் கிடக்கும் அரசு இடங்களில் கட்டிடம் கட்டி அரசுக்கு வருவாய் உருவாக்கவும் தேசிய மற்றும் சர்வதேச தனியார் நிறுவனங்களின் கட்டிட டெண்டர்களில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!

குடியிருப்பு பகுதிகள், தொழில் மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிக பூங்காக்கள் ஆகியவற்றை அழகிய கட்டடக்கலை வடிவமைப்புகளுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்குதல் மற்றும் தரக்கட்டுப்பாடு சேவைகளை வழங்கும். இனி தமிழகத்தில் பெரிய பாலம், மருத்துவமனை, தலைமைச் செயலக கட்டிடம், IT Park எல்லாம் பொதுப்பணித்துறை நேரடியாக கட்டாது என்றும் இந்த தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற கார்ப்பரேட் நிறுவனம் தான் கட்டும். இது ஒரு தனியார் கம்பெனி போல வேகமாக செயல்படும், லாபமும் ஈட்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us