AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: தீபாவளி மறுநாளும் கனமழை எச்சரிக்கை – இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

Tamil Nadu Weather today: தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9, 2026 நாளையும் 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாயப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu Weather forecast: தீபாவளி மறுநாளும் கனமழை எச்சரிக்கை – இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2026 14:52 PM IST

சென்னை, நவம்பர் 8 : தீபாவளி நாளான நவம்பர் 8, 2026 இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கனமழை (Heavy Rain Alert) பெய்யும் என்றும் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 9, 2026 நாளையும் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலரோ பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற நவம்பர் 10, 2026 செவ்வாய் கிழமை வரை வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

இதன் ஒரு பகுதியாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 9, 2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்காலிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஒரு சில சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 10, 2026 நாளை மறுநாள் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைக்கேடு – ஆராய்ச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் கனமழை

இதற்கிடையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பேசின் பிரிட்ஜ், பாரிமுனை உள்ளிட்ட 13 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையின் பேசின் பிரிட்ஜ் பகுதியில் 10 செ.மீ மழையும், பாரி முனை 9 செ.மீ மழையும், மதுரவாயல் பகுதியில் 9 செ.மீ மழையும் காயல்பட்டினம் 8 செ.மீ மழையும், தண்டையார்பேட்டையில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us