3 நாட்களில் ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது? வைரலாகும் தகவல்!
Ranbir Kapoors Ramayana Movie Box Office Collection | நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியான படம் ராமாயணா. இந்தப் படத்தின் மூன்று நாள் வசூல் என்ன என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor). இவரது நடிப்பில் இந்தி மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தி சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இந்தி மொழியில் வெளியாகும் படங்கள் இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இறுதியாக இந்தி மொழியில் திரையரங்குகளில் வெளியான படம் ராமாயணா. இந்தக் கதையில் இந்திய சினிமாவில் பல சீரியல்களும் திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி இருந்தாலும் அடுத்தடுத்தடுத்து வெளியாகும் படங்கள் மற்றும் சீரியல்களும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அதே கதையை மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் நித்திஷ் திவாரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யாஷ், ரவி துபே, அருண் கோவில்,
லாரா தத்தா, இந்திரா கிருஷ்ணன், சோனல் ஜா, ராஜீவ் குமார், ஆதிநாத் கோத்தாரே, விதான் சர்மா, நிதிஷ் சர்மா, ஹிருதன்ஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், திஷிதா சேகல், விவேக் ஓபராய், ஹரிஷ் உத்தமன், குணால் கபூர், சுஹைல் நய்யார், ஷீபா சத்தா, ஷிஷிர் சர்மா, அஜிங்க்யா தியோ, முகேஷ் திவாரி, சோனியா பாலானி, திவிஷா மஞ்சனி, ரியா கபூர், ஹேசல் ஷா, சுரபி தாஸ், பூர்வி மிஸ்ரா, ஷோபனா, ராகவ் ஜூயல், பைசல் மாலிக், ஹிருத்யன்ஷ் கோகானி, பர்மிந்தர் சாடா, சௌரப் சச்தேவா, காஞ்சன் சேடல், சேத்தன் ஹன்ஸ்ராஜ், கீதா அகர்வால் மற்றும் குழந்தை குரங்கி விஜய்ஸ்ரீ நாகராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
Also Read… தீபாவளி ஸ்பெஷல்.. விஜய் டிவியில் பேக் டூ பேக் வெளியாகும் புதிய படங்கள் என்னென்ன தெரிஞ்சிக்கோங்க!




3 நாட்களில் ராமாயணா படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது?
படம் கடந்த 05-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து படம் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ராமாயணா படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி ராமாயணா படம் உலக அளவில் மூன்று நாட்களில் ரூபாய் 375 கோடிகளை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… சூர்யா 48 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்