இந்தியா – பாகிஸ்தான் U19 கிரிக்கெட் போட்டி.. பாகிஸ்தான் அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
IND vs PAK U19 : இந்தியா - பாகிஸ்தான் U19 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால், 'குரூப் ஏ' பிரிவிலிருந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை (Asia Cup) கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 8, 2026 இன்றுஓமனில் உள்ள அல் அமெரத் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற 209 ரன்கள் எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
அர்ஜுன் ராஜ்புத் 85 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடியதே, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க முக்கிய காரணமாக அமைந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் அலி ரசா, ரிஸ்வானுல்லா மற்றும் நிகாப் ஷஃபிக் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே இந்திய கேப்டன் லக்ஷ்ய ராய்ச்சந்தானியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே சிறப்பானதாக அமைந்தது.. அலி ரசாவின் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட நிலையில், அதை விட்டுவிட முயன்ற லக்ஷ்யா, பந்தின் பாதையைத் தவறாகக் கணித்தார். பந்து உள்ளே திரும்பி வந்து ஸ்டம்புகளைத் தாக்கியது. இதனால் கேப்டன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.




இதையும் படிக்க : IND vs NZ: சொந்த மண்ணில் தொடரை இழக்குமா நியூசிலாந்து.. 7 ஆண்டு ஆதிக்கத்தை முடிவு கொண்டு வருமா இந்தியா?
அவருக்குப் பிறகு வந்தவர்களில், அர்ஜுன் மட்டுமே பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் இன்னிங்ஸைக் கட்டமைக்க முயன்ற இந்திய அணியால், முதல் ஐந்து ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐந்தாவது ஓவரில் ஆர்யவீர் சேவாக் அடித்த பந்தே, அந்த அணியின் முதல் பவுண்டரியாக அமைந்தது.
நேபாளத்திற்கு எதிரான தொடக்கப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நேபாளத்தை 128 ரன்களுக்குச் சுருட்டிய இந்தியா, 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பிரபல நட்சத்திர வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 70 ரன்கள் குவித்தார். மேலும் இந்திய கேப்டன் லக்ஷ்யா 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்ர்.
வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டது ஏன்?
மறுபுறம், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தப் போட்டிக்கு வந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால், ‘குரூப் ஏ’ பிரிவிலிருந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : IPL 2027: விரைவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோஹித்.. பஞ்சாபில் தஞ்சமடையும் ஹர்திக்..?
இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்ற வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடத் தகுதியற்றவர்கள் என்பதால், அவர் நீக்கப்பட்டார். அதற்குப் பதிலாக, ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வாய் டிராவிட் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.