AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: சொந்த மண்ணில் தொடரை இழக்குமா நியூசிலாந்து.. 7 ஆண்டு ஆதிக்கத்தை முடிவு கொண்டு வருமா இந்தியா?

IND vs NZ ODI Series: இந்தியா நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஹாமில்டனில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினால், நியூசிலாந்தின் 7 ஆண்டுகால சொந்த மண் சாதனை முறியடிக்கப்படும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். எனினும், செட்டன் பார்க் மைதானத்தில் இந்தியாவின் சாதனை சவாலானது.

IND vs NZ: சொந்த மண்ணில் தொடரை இழக்குமா நியூசிலாந்து.. 7 ஆண்டு ஆதிக்கத்தை முடிவு கொண்டு வருமா இந்தியா?
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Nov 2026 22:51 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான ஒருநாள் தொடர் கடந்த 2026 நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி (Indian Cricket Team), தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், DLS முறையைப் பயன்படுத்தி இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 10ம் தேதி ஹாமில்டனில் நடைபெறவுள்ளது. இதில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சரித்திரம் படைக்க ஒரு வாய்ப்புல்ளது.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக ஒரே ஆண்டில் அதிக தோல்விகள்.. மோசமான நிலையில் நியூசிலாந்து!

கடந்த 7 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்ததில்லை. கடைசியாக நியூசிலாந்து தனது சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தோற்றது. 2019-ல், இந்திய அணி அந்தத் தொடரில் நியூசிலாந்து அணியை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதன் பிறகு, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க தவறிவிட்டன.

சரித்திரம் படைக்குமா இந்திய அணி..?


மூன்றாவது டி20 போட்டி வருகின்ற 2026 நவம்பர் 10ம் தேதி ஹாமில்டனில் நடைபெறும். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரில் 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெறும். இதன் மூலம், சொந்த மண்ணில் நியூசிலாந்தின் ஏழு ஆண்டு கால ஒருநாள் தொடர் வெற்றிப் பயணத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும். இதற்கு முந்தைய 2 சுற்றுப்பயணங்களிலும் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி.. டிஎல்எஸ் முறையில் வெற்றி அறிவிப்பு!

தொடரில் 3-0 என முன்னிலை பெறுவது இந்திய அணிக்கு எளிதாக இருக்காது, ஏனெனில் ஹாமில்டனின் செட்டன் பார்க்கில் அவர்களின் ஒருநாள் போட்டி சாதனை மோசமாக உள்ளது. இந்திய அணி அங்கு 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு முதல், செட்டன் பார்க்கில் இந்தியா ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.

செட்டன் பார்க்கில் நடந்த 13 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து தோற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017 முதல் இந்த மைதானத்தில் கிவிஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் அவரது அணிக்கு இந்தத் தொடரை வெல்வது எளிதாக இருக்காது.

Follow Us