AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை – ஏற்காட்டில் வீசப்பட்ட உடல் பாகங்கள் – பகீர் தகவல்கள்

Bengaluru Family Murder Case : பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சேகர் என்பவர், தனது மனைவி உட்பட 7 பேரை ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை – ஏற்காட்டில் வீசப்பட்ட உடல் பாகங்கள் – பகீர் தகவல்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Nov 2026 22:08 PM IST

பெங்களூருவில் மனைவி, மாமியார், உறவினர்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சேகர் குறித்து விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் 16 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை கால் டாக்ஸி ஓட்டுநரான (Taxi Driver) இந்து சேகர் 7 பேரை கொலை செய்ததாகவும் இதில் அவரது 17 வயது மகள் உதவியதாகவும் போலீஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை

பெங்களூரு ராஜாஜிநகர் 5வது பிளாக் பகுதியில் உள்ள பாஷியம் சர்க்கிள் அருகே இந்து சேகர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுனிதா, வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். சுனிதாவின் தாய் ரூபவதி, சகோதரர்கள் சங்கர், சிவக்குமார் ஆகியோரும் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். மேலும் சங்கரின் மனைவி நளினி அவர்களுடைய மகன், சிவக்குமாரின் மனைவி திவ்யா, இவர்களது மகன் புனித் அவர்களுடன் வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தீபாவளியன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

இந்த நிலையில், சங்கர் மற்றும் அவரது மனைவி நளினி உள்ளிட்ட குடும்பத்தினர் திடீரென காணாமல் போனதாக நளினியின் தாய் துங்கம்மா கடந்த நவம்பர் 3, 2026 பெங்களூரு ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரின் செல்போன் கடைசியாக இந்து சேகரின் வீட்டில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரிடம் சிக்கிய டாக்சி டிரைவர்

செல்போன் சிக்னல் அடிப்படையில் ராஜாஜி நகரில் உள்ள இந்து சேகரின் வீட்டுக்கு சென்ற போலீசார், வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இந்து சேகரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந் நவம்பர் 4, 2026 அன்று பெங்களூரு அருகே காரில் சென்றுகொண்டிருந்த இந்து சேகரை கைது செய்துள்ளனர். அப்போது அவருடன் அவரது 17 வயது மகளும், யதீன் என்ற சிறுவனும் இருந்துள்ளனர். இதையடுத்து இந்து சேகரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது மனைவி உட்பட 7 பேரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துாதக கூறப்படுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய கொலைகள்

கடந்த அக்டோபர் 16, 2026 அன்று இந்து சேகர் தனது மனைவி சுனிதாவை முதலில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் மாமியார் ரூபவதி, மனைவியின் சகோதரர் சிவக்குமார், அவரது மனைவி திவ்யா மற்றும் அவர்களது 7 வயது மகன் புனித் ஆகியோரை விருந்துக்கு வருமாறு அழைத்து ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்திருக்கிறார். இந்து சேகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களது உடல்களையும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க : மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சேலத்தில் மீட்கப்பட்ட 2 உடல்கள்

இதனைத் தொடர்ந்து மனைவியின் மற்றொரு சகோதரரான சங்கர், அவரது மனைவி நளினி மற்றும் மகன் யதீன் ஆகியோரை சுற்றுலா செல்லலாம் என வீட்டுக்கு அழைத்து அவர்களையும் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களையும் வெவ்வேறு வனப்பகுதிகளில் வீசியதாக இந்து சேகர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, பெங்களூரு அருகே உள்ள நந்திமலை, தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு மலைப்பகுதி ஆகியவற்றில் வீசியுள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற சோதனையில் 2 உடல்கள் நவம்பர் 7, 2026 இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us