Tamil Nadu Weather forecast: தீபாவளியன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu weather today : தீபாவளி திருநாளான நவம்பர் 8, 2026 நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் நவம்பர் 11, 2026 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 7 : தீபாவளி பண்டிகை என்றாலே சட்டென அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசும் புத்தாடையும் தான். இந்த நிலையில் தீபாவளி திருநாளான நவம்பர் 8, 2026 நாளை 7 மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யும் என்றும் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடலோர பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற நவம்பர் 10, 2026 வரை கனமழைக்கும் வருகிற நவம்பர் 13, 2026 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தென்காசி அருகே பெண் எரித்து கொலை.. கணவன், தாய், கொழுந்தன் கைது.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!




அதன் ஒரு பகுதியாக நவம்பர் 7, 2026 இன்று மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தினமான நவம்பர் 8, 2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11 வரை கனமழை எச்சரிக்கை
தீபாவளி நாளில் பொதுவாக புத்தாடை உடுத்தி பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது போன்ற தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் சூழல் உருவாகியுள்ளது. மழை பெய்வதால் காற்று மாசு ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் என்பதும் ஆறுதலான விஷயம்.
இதையும் படிக்க : தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.45,000 வரை ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி மறுநாளான நவம்பர் 9, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அதற்கு அடுத்து நவம்பர் 11, 2026 தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.