AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொத்துக் குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சி.விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?

Disproportionate Assets Case: ரூ.35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், அடுத்த வாரம் மனைவி ரம்யாவுடன் அவர் ஆஜராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சி.விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?
விஜயபாஸ்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Nov 2026 12:29 PM IST

நவம்பர், 07: கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது த.வெ.க. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர் மீது, 2021-ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பெருக்கியதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் அவரது மனைவி ரம்யா மீதும் இணை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புப் துறையினர் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: “தவெக அரசு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறது”.. நீதிபதி குரியன் குழுவைக் கலைத்ததற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

மத்திய விசாரணை முகமை அதிரடி:

மாநில லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய விசாரணை முகமையான அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, 2024-ஆம் ஆண்டில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இதற்கிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவர் மீதும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை ஒருபுறம் தனியாக நடைபெற்று வருகிறது.

சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத நிலை:

இந்நிலையில், பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகப் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை சாந்தோமில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகம் சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் புதிய சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ஏற்று, நேற்று சென்னை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்தார்; அவருக்குப் பதிலாக அவரது சட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களை அளித்தனர்.

இதையும் படிக்க: மத்திய – மாநில உறவுகள் ஆய்வுக்குச் செக்.. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்தது தமிழக அரசு!

அடுத்தகட்ட நடவடிக்கை, எதிர்பார்ப்பு:

விசாரணைக்கு நேரில் ஆஜராகாததற்கான காரணம் குறித்த சட்ட விளக்கங்களை வழக்கறிஞர்கள் அளித்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, சி.விஜயபாஸ்கர் தற்காலிகமாக அவகாசம் பெற்றிருந்தாலும், சம்மன் நடைமுறைகளின்படி அடுத்த வாரம் தனது மனைவி ரம்யாவுடன் நேரில் ஆஜராகி அமலாக்கத்துறையின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரும் த.வெ.க. முக்கிய நிர்வாகியுமான விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை நெருக்கடி அதிகரித்து வரும் இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us