திரையரங்கில் 6 காட்சிகள் அனுமதி.. தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.. அன்புமணி கடும் கண்டனம்!
Anbumani Condemn 6 Screening Theaters: தமிழகத்தில் செயல்படும் தியேட்டர்களில் 6 காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி அளித்தது தமிழகத்துக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை என தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் காலை 6 மணி ஷோவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மக்கள் உழைப்பையும், உற்பத்தி திறனையும் ஊக்குவித்து முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 20, 30 மணி நேரம் திரையரங்குகளின் இருக்க வைப்பது மிகவும் பிற்போக்குதனமானது. தமிழக வரலாற்றில் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது இல்லை. தற்போது கூட அதற்கான தேவை எதுவும் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்தனர் என்பதற்காக பின் விளைவுகளை பார்க்காமல் இத்தகைய உத்தரவை வழங்கி இருக்கக் கூடாது.
அதிகாலை காட்சிக்கு வந்த ரசிகர் விபத்தில் பலி
1988- ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் 5 காட்சி அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மட்டும் 5 காட்சிகள் தவிர படம் வெளியாகும் நாளில் மட்டும் அதிகாலை காட்சியை அனுமதிக்கும் புதிய வழக்கம் ஏற்பட்டது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஜனவரி 11- ஆம் தேதி அதிகாலை திரையிடப்பட்ட படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் சரக்கு வாகனம் மீது ஏறி நடனமாடி தவறி விழுந்து உயிரிழந்தார்.
மேலும் படிக்க: பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடா.. நெவர்.. அதிக சத்தத்துடன் பட்டாசு வெடியுங்கள்.. வீ தி லீடர் அண்ணாமலை அழைப்பு!
6 காட்சிகள் அனுமதி யாருக்கும் பயனில்லை
இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியான நாளில் இருந்து ஒரு வாரத்துக்கும், விடுமுறை நாட்களிலும் 5 காட்சிகள் திரையிடுவதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த எண்ணிக்கை 6- ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் இல்லை. தமிழக அரசு ஆணைப்படி, ஒரு திரைப்படம் வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் 6 திரையிட அனுமதிக்கப்படும்.
மக்கள் பார்வையில் இருந்து மட்டுமே அரசு பார்க்க வேண்டும்
இதன் மூலம் திரைத்துறையினர் கோணத்தில் இருந்து பார்த்தால் அனைத்து நாட்களும் 6 காட்சிகள் திரையிடுவது அவர்களுக்கு வருமானம் ஆகும். பொதுமக்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் அனைத்து நாட்களும் 6 காட்சிகள் வருமானம் மற்றும் பொருளாதார இழப்பு ஆகும். எனவே, இந்த விவகாரத்தை பொதுமக்கள் பார்வையில் இருந்து மட்டுமே அரசு பார்க்க வேண்டும். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு தீபாவளி பரிசு.. விரைவில் மடிக்கணினி.. Intel Core i5 தரத்தில் விநியோகிக்க திட்டம்!