AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடா.. நெவர்.. அதிக சத்தத்துடன் பட்டாசு வெடியுங்கள்.. வீ தி லீடர் அண்ணாமலை அழைப்பு!

We The Leaders Annamalai : தமிழக மக்கள் அதிகமான பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்று வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடா.. நெவர்.. அதிக சத்தத்துடன் பட்டாசு வெடியுங்கள்.. வீ தி லீடர் அண்ணாமலை அழைப்பு!
வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Nov 2026 08:48 AM IST

தீபாவளியை பண்டிகையை அதிக பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் வீ த லீடர்ஸ் நிறுவனர் தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாளை தீபாவளி பண்டிகை அனைவரும் பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மூலம் 3 லட்சம் பேர் நேர்முகமாகவும், 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி மைய புள்ளியாக உள்ளது. இந்தியாவுக்கே சிவகாசியில் இருந்து தான் அதிக பட்டாசுகளை அனுப்பி வருகிறோம். இந்தியாவில் 4500 பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றனர். இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1300 பட்டாசு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.

பட்டாசு தொழிலில் முதலாளி முதல் தொழிலாளி வரை இன்னலை சந்திப்பு

கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலைகள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி எதிர்கொண்டு வருகிறது. பசுமை பட்டாசு, மத்திய அரசின் அமைப்புகள், ஆற்று மாசுபாடு, உச்சநீதிமன்றத்தின் பிரச்சினைகளை தாண்டி அனுமதி வாங்கி ஒவ்வொரு ஆண்டும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பட்டாசு தொழிலில் உள்ள முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரை கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். பட்டாசு வெடிக்கலாம் என்று தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்!

அதிக வெடி சத்தத்துடன் தீபாவளியை கொண்டாடுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளோம். இதனால் தான் இன்று எனது வீட்டுக்கு அருகே உள்ள 2 பட்டாசு கடைகளுக்கு சென்று எனது குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி வந்துள்ளேன். என்னைப் போல உங்களையும் பட்டாசு கடைகளுக்கு சென்று பட்டாசு வாங்குங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். தீபாவளி பண்டிகையை பட்டாசுகளுடன், நல்ல வெடி சத்தத்துடன் கொண்டாடுவோம். நாம் வாங்கும் பட்டாசு யாரோ ஒருவரின் வீட்டில் அடுப்பு எரிய உதவும்.

பட்டாசுகளால் காற்று மாசுபடும் என்பதை ஏற்க முடியாது

மாசு கட்டுப்பாடு எல்லா இடத்திலும் இருந்து வருகிறது. அந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் கூட பட்டாசுகளால் தான் பிரச்சனை வருகிறது என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆண்டு உங்கள் ஆதரவு பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் இருத்தல் வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்த பட்டாசுகளை வீட்டில் உள்ள கடைகளில் குழந்தைகளுடன் சென்று வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு டிக்கெட் கிடைக்கலையா.. கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Follow Us