AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி கொண்டாட்டம்.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த 10 லட்சம் பேர்.. ஸ்தம்பித்த முக்கிய சாலைகள்!!

Diwali Travel Rush: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் 10 லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்களில் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் நகரின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி கொண்டாட்டம்.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த 10 லட்சம் பேர்.. ஸ்தம்பித்த முக்கிய சாலைகள்!!
போக்குவரத்து நெரிசல்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Nov 2026 08:34 AM IST

சென்னை, நவ.07: தலைநகர் சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர். ஆண்டின் முக்கிய பண்டிகைகளின் போது இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், நிகழும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த சில தினங்களாகவே சென்னைவாசிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கினர். இதன் காரணமாக கிளாம்பாக்கம், கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி போன்ற முக்கியப் பேருந்து முனையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மற்றும் தனித்தனியாக தங்கி பணிபுரியும் இளைஞர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டதை காண முடிந்தது.

இதையும் படிக்க: “19 மாநில போதை மாஃபியாவுக்கு செக்!”.. ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ மூலம் நெட்வொர்க்கை தகர்த்த தமிழக காவல்துறை!

சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில் சேவை:

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறை சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக நேற்று வரை இயக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பேருந்துகள் மூலம் சுமார் 1.40 லட்சம் பயணிகள் பயணித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சுமார் 5,000 பேருந்துகள் வரை இயக்கப்பட்டு 2.50 லட்சம் வரை பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளில் ஏறுவதற்குப் பயணிகள் கடும் போட்டி போட்டனர்.

பயணிகளின் எண்ணிக்கை நிலவரம்:

அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் நேற்றிரவு வரை 5.25 லட்சம் பயணிகளும், தெற்கு ரயில்வேயின் சிறப்பு மற்றும் வழக்கமான ரயில்கள் மூலம் சுமார் 3 லட்சம் பேரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்தக் கார்கள், வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக 1.50 லட்சம் பயணிகள் வரை பயணித்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தீபாவளிக் கொண்டாட்டத்திற்காகச் சென்னையில் இருந்து மட்டும் தோராயமாக 9.75 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் வரை தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர்.

இதையும் படிக்க: 20 நாட்களில் 7 கொலைகள்.. செல்போனில் அழைத்து மனைவி குடும்பத்தை காலி செய்த டாக்ஸி ஓட்டுநர்!

நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல்:

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பயணிகள் சாலையில் பயணித்ததால், நகரின் எல்லைப் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்துப் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நெரிசலால் சற்று காலதாமதம் ஏற்பட்டபோதிலும், சொந்த ஊர் சென்று உறவினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் மகிழ்ச்சி பயணிகளிடம் மேலோங்கியது.

Follow Us