AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமியை மீட்டால் மட்டுமே தமிழகத்திற்கு உண்மையான தீபாவளி… பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

Premalatha Vijayakanth: ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட தமிழக காவல்துறையினர், இன்று காணாமல் போன ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாக விமர்சித்தார். செஞ்சி சிறுமியைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு உண்மையான தீபாவளி என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.

செஞ்சி சிறுமியை மீட்டால் மட்டுமே தமிழகத்திற்கு உண்மையான தீபாவளி… பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Nov 2026 08:35 AM IST

நவம்பர் 7, 2026: செஞ்சி சிறுமி காணாமல் போய் 23 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு உண்மையான தீபாவளியாக இருக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

விருதாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

செஞ்சி சிறுமி குறித்து ஆவேசமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்

அப்போது செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்துப் பேசிய அவர், அந்தக் குழந்தை காணாமல் போய் 23 நாட்களாகியும் இதுவரை சிறுமியின் நிலை குறித்து சிறிய ஆதாரம் கூட கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட தமிழக காவல்துறையினர், இன்று காணாமல் போன ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாக விமர்சித்தார். செஞ்சி சிறுமியைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு உண்மையான தீபாவளி என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!

தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய பிரேமலதா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், இது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “19 மாநில போதை மாஃபியாவுக்கு செக்!”.. ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ மூலம் நெட்வொர்க்கை தகர்த்த தமிழக காவல்துறை!

தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை தமிழகத்தில் இந்த அளவுக்கு விலைவாசி உயர்வைப் பார்த்ததில்லை என்றார். அரசியல் முதல் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

தொகுதி நிதி ஒதுக்கப்படவில்லை!

விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிதி ஒதுக்கப்பட்டால், தனது தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது ஏன்?

முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது குறித்துப் பேசிய பிரேமலதா, தான் கல்யாணப் பத்திரிகை கொடுப்பதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுவதாகத் தெரிவித்தார். ஆனால், உண்மையில் விருதாச்சலம் தொகுதியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு அளிப்பதற்காகவே முதலமைச்சரைச் சந்தித்ததாக விளக்கமளித்தார். அந்த மனு குறித்த தகவல்கள் வெளியில் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: செண்பகத்தோப்பு அணையில் 100 கனஅடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. திருவண்ணாமலை ஆட்சியர்!

மேலும், தனது தொகுதிக்குத் தேவையான நலத்திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து விரிவான மனுவை முதலமைச்சரிடம் அளித்ததாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Follow Us