AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செண்பகத்தோப்பு அணையில் 100 கனஅடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. திருவண்ணாமலை ஆட்சியர்!

Tiruvannamalai Flood Warning : திருவண்ணாமலை மாவட்டத்தில் செண்பகத்தோப்பு அணையில் இருந்து 100 க ன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது .

செண்பகத்தோப்பு அணையில் 100 கனஅடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. திருவண்ணாமலை ஆட்சியர்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Nov 2026 08:13 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் அதிக அளவிலான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செண்பகத் தோப்பு அணை அதன் முழு கொள்ளளவை வேகமாக எட்டி வருகிறது. இந்த நிலையில், கரையோர மக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தாலுகாவில் படவேடு கிராமத்தில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணை 62 அடி உயரம் ஆகும்.

முழு கொள்ளளவை எட்டிய செண்பகத்தோப்பு அணை

தற்போது, ஜவ்வாது மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செண்பகத்தோப்பு அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தற்போது, செண்பகத்தோப்பு அணையின் மொத்த கொள்ளளவான 62 அடியில் 57 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. பெரும்பாலும், 57 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்படாது. ஏனென்றால் அணையின் பாதுகாப்புக்காக 57 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது, செண்பகத் தோப்பு அணை 57 அடியை எட்டி உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 57 அடிக்கு மேல் அணைக்கு வரும் தண்ணீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி மது விற்பனை புதிய உச்சத்தை தொடனும்.. மது இல்லை என கூறக்கூடாது.. கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு!

அணையிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறப்பு

அதன்படி, நேற்று பிற்பகல் 12 மணி அளவில் உதவி பொறியாளர் ராஜ கணபதி தலைமையிலான நீர்வளத்துறை குழுவினர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். தற்போது, செண்பகத் தோப்பு அனைத்து 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இந்த நீர் அப்படியே சிறந்த விடப்பட்டு அலியாபாத் அணைக்கட்டு மூலமாக ஏரி கால்வாய் வழியாக சந்தவாசல், கிருஷ்ணாபுரம், நாராயணமங்கலம், காங்கரானந்தல், களம்பூர் மற்றும் ஏரி குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 16 ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பி வருகிறது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அத்துடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 6- ஆம் தேதி முதல் நாளை 8- ஆம் தேதி வரை மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக கமண்டல நாகநதி ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுவை வாயில் ஊற்றி.. சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை.. தனி அறையில் அலறிய 3 சிறுவர்கள்.. சென்னையில் ஒருவர் கைது!

Follow Us