தீபாவளி மது விற்பனை புதிய உச்சத்தை தொடனும்.. மது இல்லை என கூறக்கூடாது.. கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு!
Diwali Liquor Sales : தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு கூடுதல் மது வகைகளை இருப்பு வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் 20 மதுக்கள், 4 பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 8- ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் கூடுதல் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை 3 நாட்கள் தொடர் விடுமுறையுடன் வருவதால் பலரும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, வழக்கத்தை விட மதுபான விற்பனை அதிகமாக இருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்து வருகிறது. அதனால் தான் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி நேர மதுவிற்பனை உச்சத்தை தொடும்
அத்துடன் ஒவ்வொரு கடைகளிலும் மது பிரியர்கள் கேட்கும் மது வகைகள் கிடைக்க வேண்டும் என்பதில் நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக டாஸ்மாக் மாவட்ட சூப்பர்வைசர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிராண்ட்டை மட்டும் மது பிரியர்கள் கேட்டால் இல்லை என்று அனுப்பி விடாமல் அனைத்து பிராண்ட் வகைகளையும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை புதிய உச்சத்தை தொடும் என்று தெரிகிறது. அத்துடன், தீபாவளி பண்டிகையில் மது பிரியர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் 20 மதுபானங்கள், 4 புதிய மதுபானங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!




வெளிமாநிலங்களில் இருந்து மது வகைகள் கொள்முதல்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,040 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் எலைட் கடைகளில் 800- க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், விஸ்கி, பீர், பிராந்தி, ஜிம், மற்றும் வோட்கா உள்ளிட்ட பல வகையான மதுபானங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிங்பிஷர், பிரிட்டிஷ் எம்பயர், எஸ்.என்.ஜி. உள்ளிட்ட 21 வகையான பேர்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக புதிதாக 20 மது வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய மதுபான விலை எவ்வளவு
முதல் கட்டமாக, ஹெய்னகென் சில்வர், சிம்பா ரோர், பிர்ரா, லோன் உல்ப் ஆகிய 4 புதிய பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை மதுபானங்கள் கர்நாடகம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பீர் வகைகளின் குறைந்தபட்ச விலை ரூ. 250- ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதலில் எலைட் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ள பீர் வகைகளின் எண்ணிக்கை 21- இல் இருந்து 25- ஆக உயர போகிறது.
மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!