AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. நம்பியவர்களிடம் ரூ.13.50 லட்சம்- 13 பவுன் நகை மோசடி.. ராமநாதபுரத்தில் தம்பதி அதிரடி கைது!

Ramanathapuram Couple Arrested : ராமநாதபுரத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி 3 பேரிடம் ரூ. 13.50 லட்சம் ரொக்கம் மற்றும் 13 பவுன் தங்க நகை ஆகியவற்றை மோசடி செய்த கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. நம்பியவர்களிடம் ரூ.13.50 லட்சம்- 13 பவுன் நகை மோசடி.. ராமநாதபுரத்தில் தம்பதி அதிரடி கைது!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Nov 2026 22:06 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டிணத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து ( 50 வயது). இவரது மனைவி வனிதா ராணி ( 43 வயது). இவர் திருமண வரன் பார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதே பகுதி வண்டி கார தெருவில் வசித்து வருபவர் உதயகுமார், நந்தினி தம்பதி. இந்த நிலையில், வனிதா ராணியிடம் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தில் 5 அரசு காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும் உதயகுமார் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய வனிதா ராணி தனது உறவினர்களுக்கு அரசு பணி வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு காலி பணியிடத்திற்கு ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று உதயகுமார் தம்பதி தெரிவித்துள்ளனர். இதற்காக, வனிதா ராணி தனது உறவினர்கள் 3 பேரிடம் இருந்து ரூ. 6 லட்சத்தை பெற்று உதயகுமார் தம்பதியிடம் வழங்கியுள்ளார்.

அரசு பணி வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பெற்ற தம்பதி

அதனை பெற்றுக் கொண்ட உதயகுமார் விரைவில் பணி நியமன ஆணைகளை தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி குறிப்பிட்ட காலத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அரசு பணி கிடைப்பதில் என்ன தாமதம் என்று வனிதா ராணியை பணம் கொடுத்த அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். அவரும், உதயகுமார், நந்தினியிடம் கேட்டுள்ளார். இதற்கு, இன்னும் சிறிது நாட்களில் அரசு பணி ஆணை கிடைத்துவிடும், அதனை உங்களிடம் வழங்கி விடுகிறேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!

போலி நியமன ஆணைய காண்பித்து ரூ.13.50 லட்சம்- 13 பவுன் நகை மோசடி

அதன்படி, குறிப்பிட்ட நாளில் போலியான தொழிலாளர் நலத்துறை அலுவலக முத்திரையுடன் கூடிய போலி பணி நியமன ஆணைகளை வனிதா ராணியிடம் காண்பித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய வனிதா ராணியிடம் கூடுதல் பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு, சம்மதம் தெரிவித்த வனிதா ராணி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு தவணைகளாக ரூ.13.50 லட்சம் மற்றும் 13 பவுன் நகை ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனால், அதன் பின்னரும் பணி நியமன ஆணைகளை வழங்காமல் உதயகுமார், நந்தினி அலைக்கழித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வனிதா ராணி ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கணவன்- மனைவி கைது- சிறையில் அடைப்பு

அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கணவன், மனைவி கூட்டு சேர்ந்து பணம், நகை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், மோசடியில் ஈடுபட்ட உதயகுமார், நந்தினி கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: பள்ளி வேனில் காத்திருந்த சிறுமி.. கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.. திருவள்ளூரில் வக்கிர புத்தியுடைய வேன் ஓட்டுநர் கைது!

Follow Us