AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

EX காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார்.. திருமணம் ஆகிவிட்டதா.. RTI-இல் 1886 கேள்விகளை எழுப்பிய விழுப்புரம் இளைஞர்

Villupuram Youth Filing RTI Query : விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 97 முறை கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், 1886 கேள்விகளை அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

EX காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார்.. திருமணம் ஆகிவிட்டதா.. RTI-இல் 1886 கேள்விகளை எழுப்பிய விழுப்புரம் இளைஞர்
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 19:49 PM IST

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலி எத்தனை பேரை காதல் செய்துள்ளார் என்பது குறித்த விவரத்தை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதற்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர், கடந்த 2021- 2024- ஆம் ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த போது, தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து வந்தார். அதற்கு அந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் சந்தோஷின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவரிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்ததோடு, காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகி சென்று விட்டார்.

முன்னாள் காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார்

இருப்பினும் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த சந்தோஷ் அவரது செல்போனுக்கும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து காதல் தொந்தரவு அளித்து வந்தார். அந்த பெண் எவ்வளவோ முறை எச்சரித்தும் காதல் தொல்லையே கைவிடாத காரணத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய முன்னாள் காதலி தற்போது யாரை காதலித்து வருகிறார். இதற்கு முன்பு அவர் எத்தனை பேரை காதலித்து உள்ளார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இளைஞர் சந்தோஷ் விண்ணப்பம் செய்துள்ளார்.

மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!

முன்னாள் காதலி குறித்து 1886 கேள்விகளை எழுப்பிய இளைஞர்

இதில், தனது முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகிவிட்டதா. அவர் உயிருடன் தான் இருக்கிறாரா. அப்படி என்றால் யாரையும் காதல் செய்கிறாரா. இதற்கு முன்பு எத்தனை ஆண்களை காதல் செய்துள்ளார் என்பன உள்ளிட்ட 1886 கேள்விகளை எழுப்பி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது தகவல் அதிகாரிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து 97 விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அதிகாரி பொது நலன் சார்ந்து இல்லாத கேள்விகள் என்பதால் அதற்கு பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

ஆர்டிஐ-இல் கேள்வி எழுப்ப 1 ஆண்டு தடை விதிப்பு

இதனால், தான் கோரிய கேள்விகளுக்கு முறையான தகவல்களை வழங்கவில்லை என்று மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையாளர் இளம் பரிதி ஆர்டிஐ சட்டத்தை சிதைக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணி சுமையை ஏற்படுத்தும் வகையிலும் பொது நலன் இல்லாமல் செயல்பட்டு உள்ளதாக சந்தோஷுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அவர் கோரிய எந்த தகவல்களையும் வழங்க முடியாது எனவும், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய ஓராண்டு தடைவிதித்தும், அவருக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!

Follow Us