தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!
Tenkasi Crime : தென்காசி மாவட்டத்தில் வாழை மரதோட்டத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் தீ யிட்டு எரிக்கப்பட்ட நிலையில், கிடந்தது . இது தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தென்காசி மாவட்டத்தில் வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், சுரண்டை டூ சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் வாழை மரங்கள் மற்றும் பூசணி கொடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 6- ஆம் தேதி) காலை இந்த தோட்டத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது, அந்த தோட்டத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று நடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் கிராம மக்களுக்கு தெரிவித்தனர். இதனால், அந்த இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு கூடியது.
சம்பவ இடத்தில் தென்காசி எஸ்.பி., டிஎஸ்பி விசாரணை
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக சாம்பவர் வடகரை காவல் நிலையத்துக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், தீயில் எரிந்த நிலையில் கிடந்தது பெண் சடலம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!
சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்
இந்த சம்பவம் தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்ட பெண் வயது சுமார் 45 இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்துக்கிடமான இந்த நபரும், பொருள்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், அந்த பெண் யார், இந்த இடத்தில் அவரை அழைத்து வந்து யாரேனும் அடித்து கொன்று தீயிட்டு எரித்தனரா.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சம்பவம் நடந்த பகுதியை சுற்றிலும் தோட்டங்கள் இருப்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதளவு அந்த பகுதியில் பொருத்தப்படவில்லை. இருப்பினும், அந்த இடத்துக்கு செல்லும் வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: சிஎம் வீட்டருகே மீட்கப்பட்ட கைக்குழந்தை.. கள்ளக்காதலில் பிறந்ததால் வளர்க்க விருப்பமில்லை.. கல் நெஞ்ச தாய் ஷாக் பதில்!