பிக் பாஸ் சீக்ரட் டாஸ்க்.. முனியம்மாள் மீது சந்தேகப்படும் டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ வைரல்!
Bigg Boss Tamil Season 10 Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 9வது வாரத்தின் முடிவில் உள்ளது. இந்த வாரத்தில் பிபி திருந்துங்கடா அகாடமி டாக்ஸ் நடக்கும் நிலையில், அதனுடன் சீக்ரட் டாஸ்க் நடக்கிறது. இதில் விசாரணை போலீசாக டிடிஃஎப் வாசன் இருக்கும் நிலையில், முதல் விசாரணையில் அவர் முனியம்மாள் மீது சந்தேகப்படுவதுபோல ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருபவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 8 வாரங்களை கடந்து 9வது வாரத்தின் முடிவில் உள்ளது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான பிபி திருந்துங்கடா அகாடமி எந்த டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியிருந்தது. இந்த டாஸ்கில் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவருக்குமே சீரியல் கில்லர் எந்த சீக்ரட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த சீரியல் கில்லர் தொடர்ந்து சக போட்டியாளர்களை டார்கெட் செய்து தூக்கிவரும் நிலையில், அதை துப்பறியின் விசாரணை அதிகாரியாக டிடிஃஎப் வாசன் இருக்கிறார்.
இந்நிலையில் அஸ்மிதா மற்றும் ஜேசனை சந்தேக படாமல் இருக்கும் டிடிஃஎப் வாசன், முனியம்மாள் மீது சந்தேக படுவதுபோன்ற ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: கலக்கல் காமெடி கதையில்… நடிகர் பாரத்தின் மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
சீரியல் கில்லராக முனியம்மாளை சந்தேகப்படும் டிடிஃஎப் வாசன்:
இந்த ப்ரோமோவில் , டிடிஃஎப் வாசன் சக போட்டியாளரான முனியம்மல் மீது சந்தேகப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் அவர் முனியம்மாளிடம் துருவி துருவி கேள்விகளை கேட்பதுபோல இதில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் முனியம்மாள் அதையெல்லாம் சமாளிப்பதுபோல இந்த ப்ரோமோவில் உள்ளது. ஆனாலும் வாசன் தனது சந்தேகத்தை முனியம்மாள் மீது வைப்பதுபோல உள்ளது.
இதையும் படிங்க: பிக் பாஸில் 2 சீரியல் கில்லர்ஸ்.. போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன் – சூடுபிடிக்கும் ஆட்டம் – ப்ரோமோ இதோ!
அதை முனியாம்மலும் சரியாக மெயின்டெய்ன் செய்துவருவதாக இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவரே அந்த சீரியல் கில்லர் என்ற நிலையில், அவர்களை டிடிஃஎப் வாசன் இந்த டாஸ்கின் மூலம் கண்டுபிடிப்பார் என ரசிகர்களும் எதிர்பார்த்துவருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 61வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day61 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/zMpxQcCDq9
— Vijay Television (@vijaytelevision) November 6, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இவ்வாரத்தில் சண்டைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த வாரத்தில் இந்த வீட்டில் உணவுக்காகவே அதிக பிரச்சனைகள் இருந்ததுக்கே என கூறலாம். ஆனால் போட்டியாளர்கள் தொடர்ந்து சாப்பாட்டிற்காக சண்டையிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்டர் நிலையில், எவிக்ஷன் இருக்காது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.