AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் சர்ச்சை.. தமிழுக்குச் செய்த துரோகம் என கமல்ஹாசன் கடும் கண்டனம்!

Periyar Library Book Scam : கோயம்புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் இது தமிழுக்கு செய்யும் துரோகம் என நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் சர்ச்சை.. தமிழுக்குச் செய்த துரோகம் என கமல்ஹாசன் கடும் கண்டனம்!
கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Nov 2026 16:10 PM IST

சென்னை, நவம்பர் 6,: கோயம்புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், போலியான தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்துக்கு தமிழுக்கு செய்யும் துரோகம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் (Kamal Haasan) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு செய்யும் துரோகம் என கமல்ஹாசன் விமர்சனம்

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இதையும் படிக்க : தமிழக அரசு வங்கி கணக்கை ஹேக் செய்த கேரள சைபர் கும்பல்.. கருவூலக் கணக்கை முடக்கி ரூ.11 லட்சம் திருட்டு!

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் கடந்த நவம்பர் 5, 2025 அன்று தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது திமுக தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “முதல்வர் விஜய் பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது!”.. மேடை மோட்டிவேஷன் பேச்சை நிறுத்துங்கள்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்!!

தமிழ்நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகம் தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த விமர்சனங்கள் கவனம் பெற்றுள்ளன. நூல்களின் நம்பகத்தன்மை குறித்த அவரது கருத்துகளைத் தொடர்ந்து, புத்தகக் கொள்முதல் நடைமுறைகள் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Follow Us