AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!

CM Vijay And Trisha Attend Wedding : சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். அத்துடன் ஒரே மேடையில் மண மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!
ஒரே மேடையில் முதல்வர் விஜய்- நடிகை த்ரிஷா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Nov 2026 21:55 PM IST

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக பங்கேற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை, எம். ஆர். சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒரே மேடையில் மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் விஜய் வந்தபோது, தனது சொகுசு காரில் தனியாக வந்ததாக தெரிகிறது. இதேபோல, நடிகை திரிஷாவும் அவரது காரில் தனியாக வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே மேடையில் மண மக்களுடன் புகைப்படம் எடுத்த விஜய்- த்ரிஷா

ஆனால், திருமண விழா மேடையில் மணமக்களுடன் மேடை ஏறும் போது விஜய் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் முதல் அமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்ற போது, நடிகை திரிஷா பங்கேற்று இருந்தார். இதேபோல, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்றும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

லண்டனில் முதல்வர் விஜய்- நடிகை த்ரிஷா

இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு, நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார் பங்கேற்ற கார் போட்டியை தொடங்கி வைக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில், நடிகை திரிஷாவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இருவரும் தனித்தனியாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர்.

கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழாவில் ஒரே நிற உடையில் பங்கேற்பு

இதே போல, திருவான்மியூரில் நடைபெற்ற ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் முதல்வர் விஜய் மற்றும் நடிகர் திரிஷா ஆகியோர் ஒரே காரில் ஒரே நேரத்தில் உடை அணிந்து பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு திருமண விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்று உள்ளனர்.

மேலும் படிக்க: 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. நெல்லை சரக டிஐஜி அதிரடி!

Follow Us