Trisha Krishnan
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் த்ரிஷா. 1983 ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி சென்னையில் பிறந்த த்ரிஷா 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு காட்சியில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரது அறிமுக படமாக அதே ஆண்டில் மௌனம் பேசியதே வெளியானது. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிலம்பரசன், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என அத்தனை ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகை திரிஷா மட்டும்தான். அது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் அவர் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக ஹீரோயினாக வலம் வருபவர் என்ற சிறப்பை பெற்ற ஒரே ஒருவர் த்ரிஷா மட்டும் தான். அவர் தொடர்பான செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்
Karuppu: கருப்பா…. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!
Karuppu Movie First Single Promo: சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படத்தின் முதல் பாடல் நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Oct 19, 2025
- 19:08 pm IST
Leo Movie: ‘நா ரெடிதான் வரவா’.. இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!
2 years Of Leo: தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் தளபதியாக இருந்துவருபவர் விஜய். இவரின் முன்னணி நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் லியோ. இன்றுடன் இந்த திரைப்படமானது வெளியாகி 2 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான சிறப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Oct 19, 2025
- 17:57 pm IST
கல்யாணமா? ஹனிமூனையும் பிளான் பண்ணுங்க – திருமண சர்ச்சைக்கு திரிஷா பதில்
Trisha Marriage Rumour : திரிஷாவுக்கு திருமணம் எனவும் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் எனவும் தகவல் பரவியது. கிட்டத்தட்ட அனைத்து செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் திரிஷா அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Oct 10, 2025
- 18:30 pm IST
Trisha Krishnan: விரைவில் திரிஷாவுக்கு திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
Trisha Krishnan Wedding: தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். 40வயதிற்கு மேல் ஆகி இன்னும் இவர் திருமணம் செய்த நிலையில், விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Oct 10, 2025
- 15:23 pm IST
Trisha Krishnan: விஜய்யின் நம்பரை இப்படித்தான் சேவ் பண்ணிருக்கேன்- திரிஷா பகிர்ந்த தகவல்!
Trishas Nickname for Thalapathy Vijay: தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகி வருகிறது. முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Sep 26, 2025
- 07:30 am IST
ஏன் எப்போதுமே இப்படி இருக்கீங்க? மேடையில் கேள்விகேட்ட திரிஷா.. கமலின் ரியாக்ஷன் என்னனு பாருங்க!
Trisha Asks Kamal Haasan a Hilarious Question : தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதில் திரிஷா மேடையில் பேசியபோது, கமல்ஹாசன் குறித்து பேசிய நிலையில், அதற்கு கமல்ஹாசம்ன கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Sep 9, 2025
- 19:02 pm IST
Trisha Krishnan : விஜய் குறித்த கேள்வி.. மேடையில் வெட்கப்பட்ட திரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!
Trisha Krishnan About Thalapathy Vijay :தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் மட்டும் இந்த ஆண்டில், தொடர்ந்து பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. சமீபத்தில் சைமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிஷா நடிகர் விஜயை வாழ்த்தி பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Sep 7, 2025
- 18:46 pm IST
Karuppu : கருப்பு வருது பாருங்கடா.. சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
Karuppu Movie First Look : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் 45வது திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்நிலையில் நாளை 2025, ஜூலை 23ம் தேதி சூர்யாவின் 50வது பிறந்தநாள் என்ற நிலையில், கருப்பு படத்திலிருந்து முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த முதல் பார்வையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Jul 22, 2025
- 20:05 pm IST
திரிஷாவுடன் பேசாமல் இருந்தேன்… நயன்தாரா பகிர்ந்த விஷயம்!
Nayanthara About Trisha Friendship : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நயன்தாரா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து, ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் திரிஷாவுடன் இருந்த பிரச்சனையைப் பற்றிப் பேசியுள்ளார். அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jul 10, 2025
- 18:54 pm IST
Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ டீசர்.. சாய் அபயங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!
Karuppu Movie Teaser Update : தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் சாய் அபயங்கர்.. இவரின் இசையமைப்பில் உருவாகிவரும் படம்தான் கருப்பு. சூர்யாவின் 45வது திரைப்படமான இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து, சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Jul 4, 2025
- 11:59 am IST
Trisha Krishnan : தனுஷின் உண்மையான பெயர்.. திரிஷா கிருஷ்ணன் சொன்ன விஷயம்!
Trisha Krishnan Talk About Dhanush : தமிழ் சினிமாவிவை கடந்து, தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தனுஷை வேறு பெயர் கொண்டு அழைப்பதாகப் பேசியிருந்தார். அதைப் பற்றை விவரமாகப் பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jun 27, 2025
- 08:40 am IST
Thug Life : திரிஷாவின் நடனத்தில்.. ‘சுகர் பேபி’ வீடியோ பாடலை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
Sugar Baby Video Song : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா கிருஷ்ணன் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்திலுள்ள சுகர் பேபி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Jun 26, 2025
- 21:27 pm IST
Trisha : ‘ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விருப்பப்படவில்லை’- திரிஷா சொன்ன தகவல்
Trisha About Her Cinema Entry : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், ஆரம்பத்தில் சினிமாவில் நுழைய விருப்பமில்லாதது பற்றிப் பேசியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jun 24, 2025
- 08:54 am IST
Trisha Krishnan : ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்.. தளபதி விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திரிஷா!
Trisha Krishnan Wishes Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர பிரபலமாக இருந் வருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவர் நேற்று 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும்வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Jun 23, 2025
- 10:49 am IST
Suriya : ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா45’ பட டைட்டில்!
Suriya45 Movie Title Release : இயக்குநர், நடிகர் என தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவரின் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ள படம்தான் சூர்யா45. இன்று 2025, ஜூன் 20ம் தேதியில் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Jun 20, 2025
- 10:18 am IST