AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

R Parthiban: கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்.. திரிஷா குறித்து பார்த்திபன் பகிர்ந்த வீடியோ!

R. Parthiban And Trisha controversy: தமிழ் சினிமாவில் சில நாடகளாக திரிஷா மற்றும் பார்த்திபன் குறித்த விஷயங்கள் வைரலாகப் பேசப்பட்டுவருகிறது. அதில் பார்த்திபன் சமீபத்தில் திரிஷா குறித்து விமர்சித்திருந்த நிலையில், திரிஷாவும் பதில் செல்லும் விதத்தில் பதிலளித்திருந்தார். அந்த விதத்தில் தற்போது திரிஷா குறித்து, பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

R Parthiban: கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்.. திரிஷா குறித்து பார்த்திபன் பகிர்ந்த வீடியோ!
திரிஷா மற்றும் ஆர் பார்த்திபன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Mar 2026 18:00 PM IST

இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் ஆர்.பார்த்திபன் (R.Parthiban). இவர் தமிழ் சினிமாவையும் கடந்து தெலுங்கு மொழி படங்களிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் அவர் இயக்கும் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீப காலமாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) குறித்த பல சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.பார்த்திபன், திரிஷாவை விமர்சித்திரு பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஆர்.பார்த்திபன், “குந்தவையை கொஞ்சநாள் வீட்டில் குந்தவைப்பது நல்லது” என தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் பார்த்திபனின் கருத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் திரிஷாவும் பதிலடி கொடுத்திருந்தார். மைக் கிடைத்தால் எதுவேண்டுமானாலும் பேசலாமா ? என அவரும் பார்த்திபன் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.

இதற்கு மன்னிப்பு கேட்டு பார்த்திபன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த பிரச்சனையானது தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதத்தில் ஆர்.பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே த்ரிஷா குறித்து அப்படி பேசினேன் – வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

திரிஷா குறித்து இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் பேசிய வெளியிட்ட வீடியோ:

இந்த வீடியோவில் பேசிய ஆர்.பார்த்திபன், “திரிஷாவை நான் பாராட்டவேண்டும் என்று நினைத்த தருணத்தில்” என புரோமோ வீடியோ போல ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்கு முன்னே விடியலாக முழு வீடியோ வரும்” என தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நடிகை திரிஷா குறித்து ஆர்.பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா காப்பாற்றிய பேசிய முழு வீடியோவாக பார்த்திபன் வெளியிடவுள்ளார் என தெரியவருகிறது. அவர் இந்த வீடியோ எப்போது வெளியாகும் என குறிப்பிட்ட அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: அறிவு இல்லாமல் கீழ்த்தரமான… தன் மீதான விமர்சனத்துக்கு திரிஷா அதிரடி பதில்

எச்சரிக்கும் விதத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கோலிவுட் சினிமாவில் சமீப கமலமாக திரிஷா குறித்த பல சர்ச்சைகள் பேசப்பட்டுவருகிறது. பல பிரபலங்களும் இதுகுறித்து பேசிவரும் நிலையில், மக்களும் இது குறித்து பேச தொடங்கியுள்ளனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் திரிஷா எதாவது விஷயத்தை செய்வாரா? என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us