D56 Movie: தனுஷின் டி56 படத்தில் நடிக்கும் உறியடி பட நடிகர்? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து போட்ட பதிவு!
D56 Movie Update: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவருபவர் தனுஷ். இவர் தற்போது டி55 படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில், இதையடுத்து லப்பர் பந்து பட இயக்குநருடன் டி56 படத்தில் இணைகிறார். இப்படத்தில் தனுசுடன் முக்கிய வேடத்தில் உறியடி பட நடிகர் இணையவுள்ளார். அது குறித்து இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் (Dhanush) தனது நடிப்பில் தொடர்ந்து புது புது திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கர (kara) என்ற படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2026 ஏப்ர 30ம் தேதியில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் டி55 (D55) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது இதற்கான பணியில் தனுஷ் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் தனுஷ் “டி56” (D56) படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தை லப்பர் பந்து (Lubber Pandhu) பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கவுள்ளாராம். இது குறித்து அவர் சமீபத்தில் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தனுஷ் இப்படத்தின் ஷூட்டிங்கில் விரைவில் இணைகிறாராம். இந்நிலையில் இதில் தனுஷ் நடிக்கிறார் என்பது தெரியும், ஆனால் அவருடன் பிரபல நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது வேறுயாருமில்லை உறியடி (Uriyadi) படத்தில் நடித்த விஜய் குமார்தான் (Vijay Kumar) .




இதையும் படிங்க: யூத் படத்தை நான்தான் இயக்கவேண்டும் என முடிவெடுக்க வைத்ததே அவர்தான் – கென் கருணாஸ் பேச்சு!
டி 56 படம் பற்றி இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Madurai ku varanum🤷♂️#D56 https://t.co/GFkPdw2BUT
— Tamizharasan Pachamuthu (@tamizh018) March 9, 2026
நடிகர் விஜய் குமார் நடித்துவரும் புது படமான அறிவு என்ற படத்தின் முதல் பார்வை நேற்று (08/03/2026) வெளியிடப்பட்டிருந்தது. அதை பகிர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த வாழ்த்திற்கு பதிலாக நடிகர் விஜய் குமார், “நன்றி, இந்த படத்தை முடிச்சிட்டு சீக்கிரமாக வருகிறேன்” என பதிலளித்திருந்தார். அதற்கும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “மதுரைக்கு வரணும்” என்று கூறியதுமட்டுமில்லாமல், நடிகர் தனுஷின் டி56 என்ற படத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏப்ரலில் கருப்பு படத்தின் ரிலீஸ் இல்லையா? இணையத்தில் வைரலாகும் புது தேதி…
இந்நிலையில் நடிகர் விஜய் குமார், தனுஷின் டி56 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. இல்லை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் படத்தில் இணைந்து இயக்குகிறாரா? என்பது தெரியவில்லை. தற்போது இது தொடர்பான பதிவு மத்தியில் பரவிவருகிறது. தற்போது டி56 படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.