ஏப்ரலில் கருப்பு படத்தின் ரிலீஸ் இல்லையா? இணையத்தில் வைரலாகும் புது தேதி…
Actor Suriyas Karuppu Movie Release Date Update: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி பிரபலங்களுக்கு பிடித்த நடிகராகவும் நடிகர் சூர்யா வலம் வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தற்போது உருவாகி வருகின்றது. அதில் தற்போது முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த கருப்பு படம் கடந்த 2025-ம் ஆண்டிலேயே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் சில காட்சிகள் படமாக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து படம் கடந்த ஆண்டு வெளியாகாமல் போனது.
இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதுமே கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. மேலும் படத்தின் வெளியீடு கோடையில் இருக்கும் என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் தெரிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




ஏப்ரலில் கருப்பு படத்தின் ரிலீஸ் இல்லையா?
இந்த நிலையில் கருப்பு படத்தின் வெளியீடு ஏப்ரல் மாத இறுதியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மே 1-ம் தேதி 2025-ம் ஆண்டில் தான் இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த 10 நாட்களில் படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜீ 5 ஓடிடி நிறுவனங்கள் படத்தைப் பார்த்துவிட்டு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
– #Suriya’s #Karuppu is being planned for a May 1 release. The OTT deal will be finalized within the next 10 days.
– Both Netflix and ZEE5 have watched the film and liked it, and the producer will take the final call.
Let’s Wait & See 🤞 pic.twitter.com/3IlqAVLpjR
— Movie Tamil (@_MovieTamil) March 8, 2026
Also Read… அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் போட்டோ