AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!

Actor Vijay Divorce Case Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது படம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வைரலாகி வந்த நிலையில் தற்போது சொன்ந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் அதிக அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!
சங்கீதா மற்றும் விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Mar 2026 12:39 PM IST

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நாயகனாக உள்ள நடிகர் தளபதி விஜய் (Actor Thalapathy Vijay) தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்து வருகிறார். நடிப்புத் துறையில் உச்சத்தில் இருக்கும் இவர் தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் களம் இறங்கி உள்ளார். இது குறித்து அவர் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஜயின் சினிமா வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிக அளவில் இடம்பிடித்து வந்த நிலையில் தற்போது அவரது விவாகரத்து வழக்கு தொடர்பான செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் மீது பல குற்றச்சாட்டுகளுன் அவரது மனைவி சங்கீதா (Sangeetha Vijay) செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து உள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சங்கீதா தற்போது நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, லண்டனில் குடியுரிமைப் பெற்று வாழும் தனக்கு சென்னையில் தனியாக வீடு இல்லை. மேலும் தற்போது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளதால் சென்னையில் தங்க வீடு இன்றி தவிக்கிறேன். இந்த நிலையில் என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… Ken Karunas: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல – கென் கருணாஸ் வேதனை!

சங்கீதா மனுவில் விஜய் மீது வைத்துள்ள அடுக்கடுக்கான புகார்கள்:

தொடர்ந்து அந்த மனுவில் சங்கீதா கூறியுள்ளதாவது, சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர் விஜய் தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் சேரவேண்டிய ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறும் வரை தனக்கு விஜய் வீட்டிற்குள் செல்ல உரிமை உள்ளது என்றும் சங்கீதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மனுவில் சங்கீதா கூறியுள்ளதாவது, விஜயின் அரசியல் சூழல் கருதி சுமூகமாக விவாகரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தாலும் விஜய் பிரிந்து செல்ல மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பான செய்தி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

Follow Us