டிக்கெட் முன்பதிவை தொடங்கியது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படக்குழு
Mookuthi Amman 2 Movie Ticket Booking Open Now | நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதில் ஒன்று நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள சீன் மற்றொன்று நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு ஜானர்களில் உள்ள நிலையில் இரண்டு படத்திற்கும் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர் நடித்துள்ள அம்மன் வேடத்திலேயே பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படக்குழுவினர் அதையே புரமோசனாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை என்று விலகிய நிலையில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை எழுதி இயக்கி உள்ளார்.




டிக்கெட் முன்பதிவை தொடங்கியது மூக்குத்தி அம்மன் 2 படக்குழு:
இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் உட்பட நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஒற்றுமையே இல்லை என்பது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பேசிய போதும் அதனை தெளிவுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங்கை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
BOOKINGS OPEN NOW 🔱
#MookuthiAmman2
🎟️ https://t.co/muQR2YzuYJ#Mahasakthi
🎟️ https://t.co/oiLLwcsBAyA @sundarcoffl Spectacle 🔥
Grand Diwali release on November 6, 2026
#MookuthiAmman2FromNov6
#MahasakthiFromNov6@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara #VigneshShivan @khushsundar @AvniCinemax_ @Rowdy_Pictures @kushmithaganesh #AnanditaSundar @hiphoptamizha @gopiamar @FennyOliver @ReginaCassandra @iYogiBabu @suneeltollywood @Officialsalaga @mgabhinaya @Venkatt_Ragavan @vichuviswanath @Inban_U @teamaimpr @redgiantmovies_ @Ayngaran_offl @BigfilmsLtd @BhavanaRelease @AAFilmsIndia @asianet @velsmusicintl @vijaytelevision @JioHotstar @kav_pandian @thetabsofficial
— Vels Film International (@VelsFilmIntl) November 4, 2026