பூஜையுடன் தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!
Dare Devil Shooting Pooja: தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில் மக்களிடையே பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் இணைந்துள்ளார். அந்த விதத்தில் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டு இறுதியில் கார் ரேஸ் பக்கம் சென்ற நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அதில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் இறுதியாக அவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, அஜித்தின் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை பெற்றிருந்தது. அந்த விதத்தில் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 64வது படமான டேர் டெவில் (Dare Devil Movie) படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் இன்று (02/11/2026) இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிற்து.




இதையும் படிங்க: அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!
இணையத்தில் வைரலாகிவரும் அஜித் குமாரின் டேர் டெவில் பட ஷூட்டிங் பூஜை கிளிக்ஸ் பதிவு:
#DareDevilPoojai 💥🥳
#AjithKumar #DareDevil #Gladiators https://t.co/3IZCjsipeZ
— Vasanth Raj (@vasanthraj001) November 2, 2026
அஜித்தின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று நடைபெற்றுள்ள நிலையில், இதில் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த பூஜையில் ஆதிக் ரவிச்சந்திரன், ஆர்.பார்த்திபன், சுனில், ஸ்ரீலீலா, பிரபு, விக்ரம் பிரபு நடிகை ஷாமிலி மற்றும் அவரின் குழந்தைகள் என இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அவங்க ரெண்டுபேர் லவ் ஓவர்-ஆ இருக்கு.. சூர்யா – ஜோதிகா குறித்து பேசிய கார்த்தி!
ஆனால் நடிகர் அஜித் குமார் இந்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த படத்தை ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
அஜித் குமாரின் டேர் டெவில் பட ஷூட்டிங் எப்போது முழுவதுமாக தொடங்கும்:
இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் முழுவதுமாக நவம்பர் மாதத்தில் தீபாவளி முடிந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. நவம்பர் 12ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் குமார் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகையாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ள நிலையில், இவர்கள் இருவரின் ஜோடி எவ்வாறு அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.