AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Anbil Mahesh Sent to Police Custody: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 4-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Nov 2026 13:32 PM IST

சென்னை, நவ.02: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் முன்னாள் அமைச்சரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று முறையான அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அவரை நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘ரிவர்ஸ் கியரில்’ வேகமாக செல்லும் தவெக அரசு.. முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்:

விசாரணைக்கான அனுமதியை வழங்கிய அதேவேளையில், நீதிமன்றம் சில முக்கிய மற்றும் கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி, விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் பி. பாபு உடன் இருக்க அனுமதி கோரப்பட்ட கோரிக்கையை ஏற்று, விசாரணை நடைபெறும் இடத்திற்கு அருகில் தொலைவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறுக்கிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலில் எடுப்பதற்கு முன்பும், காவலில் முடித்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தும் போதும் கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முழுமையான விசாரணை நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் சிசிடிவி மற்றும் உரிய முறையில் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை:

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறை பாதுகாப்புடன் அன்பில் மகேஷ் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இன்று மதியம் ஒரு மணி முதல் தொடங்கும் இந்த விசாரணையானது நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவானது எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க: முரசு புயல் அப்டேட்.. நவம்பர் மாதம் மழை எப்படி இருக்கும்? டெல்டா வெதர்மேன் விரிவான விளக்கம்

கைது நடவடிக்கையும் தொடர் விசாரணைகளும்:

முக்கியமான முன்னாள் அமைச்சர் ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறையில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் பல முக்கிய உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், நீதித்துறை விசாரணையின் முடிவுகள் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us